பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


தீர்மானித்துக்கொண்ட. அன்று சனிக்கிழமை. இருவரும் காலையிலேயே பிட்ஜெரால்டு அம்மையின் வீட்டுக்குச்சென்று பகல் முழுவதும் படுத்துறங்கி ஓய்வெடுத்துக்கொண்டனர். அந்த அம்மையும் திப்பெரரியைச் சேர்ந்தவராதலால் அவர்களை அன்புடன் ஆதரித்தார்.

மறுநாள் அவர்கள் அரைமைல் தூரத்திலிருந்த கெயிலிக் தேசப்பயிற்சிக் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று பொழுதைப் போக்கினர். அங்கிருந்த நண்பர்களுடன் அவர்கள் சீட்டு விளையாடவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பந்தயப் பணம் அதிகமாயில்லாதால் தான்பிரீன் பணம்வைத்து விளையாடுவதில் சலிப்படையவில்லை. சீட்டாட்டத்திலுங்கூட அதிர்ஷ்டம் அவன் பக்கத்திலிருந்தது. அவன் கையில் கொஞ்சம் பணம் சேரவும் இது ஒரு வழியாயிற்று. அச்சமயத்தில் அவனுக்குப்பிற்கால வேலைகளைப்பற்றி மனதில் முடிவான திட்டம் எதுவுமில்லை. தலைமைக் காரியாலயத்தார் அவனையும் அவன் நண்பர்களையும், சில போலியான காரணங்களைச் சொல்லி, டப்ளினிலேயே பலநாள் தாமதிக்கும்படி செய்தனர். தலைவர்கள் முன்னால் நின்று வழிகாட்டத் தயாராயிருக்கவில்லை; மற்றவர்கள் சுயேச்சையாக வேலைசெய்யவும், வழி விடவில்லை. டின்னி லேலி தான்பிரீனை எதிர்த்த்துத் திப்பெரரியில் தான். தலைமைக் காரியாலயத்தார் பொறுப்பேற்க அஞ்சினதோடு, தான்பிரீனை விரைவாக ஊருக்கு அனுப்பத் தயாராயில்லை. ஆனால், தொண்டர்கள் அடிக்கடி பயிற்சி செய்து வந்ததால், அதிக தைரியத்தையும் பயிற்சிகளையும் பெற்று வந்தனர். அவர்களுடைய குடியரசுப் படை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது. சுடச்சுட ஒளிரும்பொன்பொல், துன்பங்களை அனுபவித்து, அனுபவித்து அப்படை மிக்க வல்லமையுைடயதாகிவிட்டது.

11ஆம் தேதி மாலை தான்பிரீன் டிரீன்லியை அழைத்துக்கொண்டு சினிமா ஒன்றைப் பார்க்கச்சென்றான். அது பொழுது போக்காயிருக்கும் என்று அவன் கருதினான். கொட்டகையில் டிரம்கொண்டராவைச் சேர்ந்த பிளெமிங் குமாரிகள் இருவரையும் ஈமன் ஒபிரியனுடைய மனைவியையும் சந்தித்தான். அவர்கள் அவனையும் டிரீஸியையும் கண்டு திடுக்கிட்டுப்போயினர். இருவரையும் பிடிப்பதற்குத் தேசம் முழுவதும் பட்டாளங்களும் பீலர்களும் இரவு பகலாய் அலைந்து தேடிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தலைநகரத்தில் பல்லாயிரம் மக்கள்கூடியுள்ள கொட்டகையில் வந்து நின்றது. பெரும் வியப்பாகவே தோன்றியது. அவர்களை எந்தச் சிப்பாய் கண்டாலும் சுட்டுத்தள்ளும்படி சர்க்கார் உத்தரவு போட்டிருந்தது. தான்பிரீன் அந்தப் பெண்களோடு குடும்ப நலங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். காட்சிமுடிந்த பின்பு எல்லோரும் சேர்ந்து வெளியேறினர்.

கொட்டகை வாயிலில் ஒற்றன் ஒருவன் நின்று கொண்டு வெளியே போகிறவர்களைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன்

121