பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

19
டிராம்கொண்டரா சண்டை


அன்றிரவு 11 மணிக்கு தான்பிரீனும், டிரீஸியும் பிளெமிங் குடும்பத்தாருடைய வீட்டிலிருந்து புறப்பட்டனர். வாயில் வழியாகச் சென்றால் போலிஸ் ஒற்றர்கள் ஒரு வேளை கவனித்து விடக்கூடும் என்று அவர்கள் கொல்லைப் புறமாகவே வெளியேறினர். அருகேயிருந்த ஒரு தோட்டத்திற்குள்ளே சென்று அவர்கள் மேற்கொண்டு எங்கு போகலாம் என்பதைப் பற்றி யோசித்தனர். திருமதி பிட்ஜெரால்டின் வீடும், கரோலன் என்ற நண்பருடைய வீடுமே அவர்கள் அன்றிரவு தங்குவதற்கு ஏற்ற இடங்கள். முடிவாகக் கரோலனுடைய வீட்டை நோக்கியே அவர்கள் புறப்பட்டனர். வழியில் டோல்கா நதியின் மேல் கட்டப்பட்டிருந்த ஒரு பாலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அப்பாலத்தின் மேல் செல்லும் பொழுது அவர்கள் வெகுதூரத்தில் ராணுவ லாரிகள் ஓடிக்கொண்டிருந்த ஓசையைச் செவியுற்றனர். அப்பொழுது ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததால் 12 மணிக்கு மேல் யாராவது தெருவில் வருகிறார்களா என்று பார்ப்பதற்கு ராணுவத்தார்சுற்றிக் கொண்டிந்தனர். அதற்கு வெகுநேரத்திற்கு முன்பே தெருக்களில் ஜனநடமாட்டம் நின்று போய்விட்டது.

தான்பிரீன் எப்பொழுதும் கரோலனுடைய வீட்டுக்கு இரவு 11மணிக்கு முன்பே போய்விடுவது வழக்கம். ஆனால் இந்தத் தடவை அங்கு சேரும்பொழுது 11.30 ஆகிவிட்டது. வீட்டில் வெளிச்சமொன்றும் காணப்படாமையால் வீட்டிலுள்ளவர்கள் உறங்கிவிட்டனர் என்று தெரிந்தது. தான்பிரீனும் டீரீஸியும் சந்தடி செய்யாமல் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே புகுந்தனர். அவர்கள்

123