பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


எந்த நேரமும் தங்குவதற்காக மேல்மாடியின் பின்புறத்தில் நாற்றுக்கூட்டத்தின் பக்கம் ஓர் அறையில் படுக்கை முதலானவை போடப்பட்டிருந்தன. அவர்கள் வீட்டிலுள்ளவர் எவரும் அறியாமலே அங்கே சென்று படுத்துக்கொண்டனர்.

இரண்டு பேர்களும் ஒரே படுக்கையில் படுத்துக் கண்களை மூடிக்கொண்டு உறங்க முயன்றனர். ஆனால் உறக்கம் வரவில்லை. பிற்கால வேலைத்திட்டத்தைப் பற்றியும், திப்பெரரிக்குத் திரும்பவேண்டியதைப் பற்றியும் பேச ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்திற்குப் பின்னால் பேச்சுச் சுருங்கிவிட்டது.

இதன் பின்னால் இருவரும் சிறிது கண்ணயர்ந்தனர். சில நிமிஷங்கள் கழிவதற்கு முன்னால் இருவரும் திடீரென்று விழித்தெழுந்து படுக்கையில் உட்கார்ந்தனர். வெளியே தெருவில் சிப்பாய்கள் பலர் 'பூட்ஸ்' காலுடன் அணிவகுத்து நடக்கும் சப்தம் கேட்டது. பின் பக்கத்து ஜன்னல் வழியாக அவர்கள் இருந்த அறைக்குள் ஒரு மின்சார விளக்கைக் காட்டியதாலேயே அவ்வெளிச்சம் தெரிந்தது. அப்போழுது ஒரு மணி இருக்கும்.

முன் கதவில் ஏதோ கண்ணாடி சட சட' வென்று உடைந்தது! ஒரு கதவு திறக்கப்பட்டது. படிகளின் வழியே சிப்பாய்கள் ஏறிவந்த காலோசையும் கேட்டது!

உடனே தான்பிரீனும் டிரீஸியும் படுக்கையிலிருந்து ஏககாலத்தில் துள்ளி ஏழுந்தனர். இருவரும் ரிவால்வர்களைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். தான்பிரீன் இரண்டு கைகளிலும் இரண்டு ரிவால்வர்களைப் பிடித்துக்கொண்டான். அவர்களுடைய அறைக்கதவை யாரோ வெளியில் தட்டிக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. தான்பிரீன் வாய் திறக்கவேயில்லை. டிரீஸி அண்டையில் நின்ற அவன் வலக்கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு, 'வந்தனம் அன்பா இனி மேலுலகில் சந்தித்துக் கொள்வோம்' என்று கூறினான்.

அந்த நிமிஷத்தில் வெளிக்கதவின் வழியாக இரண்டு குண்டுகள் சரேலென்று உள்ளே பாய்ந்தன. உள்ளிருந்தவர்களும் உடனே சுட ஆரம்பித்தனர். அறைக்குள்ளே குண்டுகளின் ஒளியைத் தவிர வேறு வெளிச்சமில்லை. வெளியே ஒர் ஆங்கிலேயன் தன் பாஷையில் ரியான் எங்கேயிருக்கிறான்? ரியான் எங்கே யிருக்கிறான்? என்று கூவினான்.

எல்லாப் பக்கங்களிலும் குண்டுகள் பாய்ந்து கொண்டிருந்தன. அறைக்கதவு சிறிது திறந்திருந்தது. தான்பிரீன் கதவை நோக்கிச் சென்றான். அவனது வலது கைப் பெருவிரலிலே ஒரு குண்டுபட்டு இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் வலியைச் சிறிதும் உணரவில்லை. வெளியே யாரோ ஒருவன் வழுக்கி விழுந்த ஓசை கேட்டது. அந்நேரத்தில் டிரீஸியின் ரிவால்வரில் ஏதோகோளாறு எற்பட்டுச் சுடமுடியாது போயிற்று. தான்பிரீன் அவனை பின்

124