பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


புறத்து ஜன்னலைக் கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வாயிற்கதவைத் தாண்டி வெளியேற முயன்றான். அப்பொழுது ஒரு குண்டு உள்ளே வந்து உடைகள் வைத்திருந்த இடத்தில் பாய்ந்தது. மாடிப்படியிலிருந்து சுடும் ஒசை திடீரென்று சிறிது நேரம் நின்றுவிட்டது. சிப்பாய்கள் மடமடவென்று கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அறையின் பின்புறத்தில் குண்டுகள் வெடித்த வண்ணமாயிருந்தன.

தான்பிரீன் அறைக்கு வெளியே சென்று மாடிப்படிகளை உற்று நோக்கினான். கீழேயிருந்து ஆறு சிப்பாய்கள் மின்சார விளக்குகளை ஏந்திக் கொண்டு மீண்டும் மேலே போராடவந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய விளக்கொளியில் தான்பிரினுடைய உருவம் வெகு தெளிவாய்த் தெரிந்தது. அவன் பகைவர்கள் தன்னை எளிதில் குறிவைத்துக் கொன்றுவிடுவார்கள் என்பதையறிந்து விரைவாக அவர்களை நோக்கிக் குண்டுக்கு மேல் குண்டாகப் பொழிந்து கொண்டிருந்தான். வீட்டைச்சுற்றிப்பட்டாளத்தார் நின்ற விஷயமும், அவன் அவர்கள் அனைவரிடமிருந்தும் தப்பிச்செல்வது எளிதல்ல என்பதும் அவனுக்கு நன்றாய்த் தெரியும். ஆயினும் அவன் அஞ்சவில்லை. மரணம் நிச்சயம் என்று தோன்றிய போதிலும், எதிரிகளில் எத்தனை பேரை வதைக்க முடியுமோ அத்தனை பேரையும் தீர்த்து விட்டுத்தான் மடிய வேண்டும் என்று வீராவேசம் கொண்டு நின்றான்.

அவன் படிக்கட்டை நோக்கிச் சுட்டுக் கொண்டே சென்ற பொழுது சிப்பாய்கள் கீழிறங்கி ஓட முயன்றனர். சிலர் கீழ் வீட்டிலுள்ள அறைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். மற்றும் சிலர் ஒருவர்மேலோருவர் விழுந்துகொண்டு தெருவுக்கு ஓடிச்சென்றனர். தான்பிரீனுடைய குண்டுகளுக்கேற்ற பகைவன் எவனையும் காணோம். பின்புறத்தில் மட்டும் இடையிடையே ஒரு குண்டோசையும் காயப்பட்டவருடைய புலம்பலும் கேட்டன.

முன்னால் வேறு சிப்பாய்களைக் காணாமையால் தான்பிரீன் அவசரமாக அறையை நோக்கித் திரும்பினான். அறையின் வாயிற்படியில் இரண்டு பட்டாள அதிகாரிகள் செத்துக்கிடந்தனர். ஒரு சிப்பாய் குற்றுயிராயிருந்தான். தான்பிரீன் அவர்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர்களை வழியைவிட்டு வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு அவன் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். முதலில் அறையை விட்டு வெளியே சென்றபோது அவன் இந்தப் பிரதங்களைப் பார்க்கவில்லை. அதற்குக் காரணம் சண்டையின் வேகத்திலே அவனுக்கெதுவும் நன்றாய்ப் புலப்படவில்லை.

சிறிதும் ஓய்திருக்க முடியவில்லை. ஏனென்றால் பட்டாளத்தார் நூற்றுக் கணக்காய் வந்திருந்ததால் மீண்டும் ஒரு முறை வந்து தாக்குவார்கள் என்று அவன் எதிர்பார்த்து ஜன்னலருகில் சென்றான். பின்புறத்திலிருந்து மின்சார விளக்கின் வெளிச்சம் அறைக்குள் வீசியதும் கண்ணாடிக் கதவுகளை உடைத்

125