பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


களும் கல்யான விமரிசைகளில் கலந்துகொண்டனர். ஆனால் பையன்கள் நடனமாடும் பொழுதும் துப்பாக்கிகளை மட்டும் மறக்கவில்லை. அவை பக்கத்து ஜன்னல்களில் தயாராயிருந்தன. கூத்திலும் பாட்டிலுங்கூட அவர்கள் போருக்குத் தயாராகவேயிருந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு தான்பிரீன் தம்பதிகள் பல அன்பர்களுடைய விருந்தினர்களாக அநேக ஊர்களில் தங்கிவந்தனர். சென்ற இடங்களிலெல்லாம் அவர்களுக்குக் கிடைத்த பாதுகாப்புக்கும் உபசாரத்திற்கும் அளவில்லை. அவர்களை வாழ்த்தாத நண்பரேயில்லை; வியந்து போற்றாத ஜனங்களேயில்லை.

137