பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லப்பட்டு வந்தனர். இவ்வாறான நடவடிக்கைகளால் இம்மாற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் இந்நடவடிக்கைகள் தடைகளை ஏற்படுத்த மட்டுமே உதவின.

ஐரிஷ் மக்கள் தமது சொந்தப் பூமியிலேயே தமது நிலங்களை இழந்து வந்தார்கள். கத்தோலிக்க ஐரிஷ் மக்களின் கையிலிருந்து முதலில் ஆங்கிலேயர் கைக்கும், புரட்டஸ்தாந்தினரின் கைக்கும் நிலங்கள் மாறிவந்தன. 1703 ஆம் ஆண்டு 14% நிலங்கள் மட்டுமே ரோமன் கத்தோலிக்க ஐரிஷ் மக்களின் கையிலிருந்தது. ஐரிஷ் மக்கள் தமது நாட்டைவிட்டுப் படிப்படியாக வெறியேறி அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறத் தொடங்கினர். 1847 ஆம் ஆண்டு அயர்லாந்திற் பெரும் பஞ்சமேற்பட்டது. இதில் இரண்டரை லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள். ஏறக்குறைய 7% இலட்சம் மக்கள் அயர்லாந்தைவிட்டுக் குடிபெயர்ந்தார்கள்.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தேசிய விழிப்புணர்ச்சி பெரிதும் ஏற்பட்டது. 1847ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் ஆங்கிலேயர் மீது அதிக வெறுப்புணர்ச்சியை ஐரிஷ் மக்களின் மத்தியில் உருவாக்கியது. ஐரிஷ் மொழி, கலாசாரம் என்பவற்றைப் புதுப்பித்தல் என்பதற்கான இயக்கம், நிலச்சீர்திருத்தங்களுக்கான இயக்கம் என்பன தோன்றின. அயர்லாந்து தனி அரசாக அமைய வேண்டுமென்ற சிந்தனை வலுவடையத் தொடங்கியது. அயர்லாந்து தனியரசாக அமையவேண்டுமா வேண்டாமா என்ற வாதப் பிரதிவாதங்கள் கூட எழுந்தன. அயர்லாந்து ஒரு தனியரசாக அமையக்கூடாதென்ற கருத்தினை கார்ல் மார்க்ஸ் 1850களில் 60களின் மத்தியிலும் கொண்டிருந்தார். ஆனால் அவர் 1857 ஆம் ஆண்டு இக்கருத்தினை மாற்றி அயர்லாந்து பிரிட்டனியாவிடமிருந்து ஒரு தனியரசாகப் பிரிய வேண்டுமென்ற கருத்தினை வெளியிட்டார். [Previously I thought Ireland's separation from England impossible: Now I think it inevitable..." Marx(1967)] மேலும் மார்க்ஸ் 1869 ஆம் ஆண்டு இதுபற்றி குறிப்பிடுகையில் ஆழமான ஆய்வின் மூலம் அயர்லாந்து பிரிவதுதான் சரியென்ற நம்பிக்கை என்னிடம் ஏற்பட்டுள்ளது என்றார். [Deeper study has now convinced me of the opposite"... Marx (1869)] இதனைத் தொடர்ந்து மார்க்ஸ் அயர்லாந்து விடுதலை அடையவேண்டுமென்பதற்காகத் தன்னாலானவரை உழைத்தார். அயர்லாந்துப் போராட்டம் தனியரசுக் கோரிக்கையை நோக்கி வளர்ந்து சென்றது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அயர்லாந்தில் பல இயக்கங்கள் தோன்றின. அவற்றைப் பண்புரீதியாக மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, அயர்

17