பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தளங்கள் இருப்பதையும் டிவலெரா உட்படக் குடியரசுவாதிகளின் ஒரு பிரிவினர் வன்மையாக எதிர்த்தனர். ஆர்தர் கிரிபித், மைக்கேல் காலின்ஸ் போன்றோர் Irish Free State திட்டத்தை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று வாதிட்டனர். இறுதியில் குடியரசுவாதிகளின் பெரும்பான்மையினரால் Irish Free State திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1921ஆம் ஆண்டு irish Free State உடன்படிக்கையை ஏற்று ஆர்தர் கிரிபித், மைக்கேல் காலின்ஸ் என்போர் கையெழுத்திட்டனர். 1922ஆம் ஆண்டு Irish Free State என்ற பெயரில் தென் அயர்லாந்தில் கிரிபித், காலின்ஸ் ஆகியோரின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டது. வட அயர்லாந்து (Ulster) பிரிட்டனுடனேயே இணைக்கப்பட்டது. டிவலெரா உட்படக் குடியரசுவாதிகளின் ஒரு பிரிவினர் Irish Free State ஐயும் வட அயர்லாந்து தென் அயர்லாந்திலிருந்து பிரிக்கப்பட்டதையும் எதிர்த்துப்போராட்டத்தில் ஈடுபட்டனர். iris, Rupublican Army யில் (IRA) ஒரு பிரிவினர் புதிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இராணுவமாகினர். மறுபிரிவினர் இத்திட்டத்தினை எதிர்த்து ஆயுதம்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் ஓர் உள் நாட்டுபோர் உருவாகிவிட்டது. இதுதான் irish Civil War (1922-23) என வரலாற்றாசிரியர்களால் வர்ணிக்கப்படும் போராய் இடம்பெற்றது. உள்நாட்டுப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கையிலே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த இரு தலைவர்களில் ஒருவான கிரிபித் 1922 செப்டம்பர் முதல்வராத்தில் இயற்கை மரணமெய்தினார். அதேமாதம் பிற்பகுதியில் மற்றவரான காலின்ஸ் அரச இராணுவ முகாமினைப் பார்விையடச் சென்றுகொண்டிருக்கையில் குண்டுத்தாக்குதலுக்கிலக்காகி மரணமடைந்தார். விடுதலைக்காக ஒன்றாக இணைந்து தோளோடுதோள் நின்று போராடியவர்கள் இரு அணிகளாகப் பிரித்து ஒருவரை ஒருவர் கொல்வதில் ஈடுபட்டனர். இந்த உள்நாட்டுயுத்தத்தில் எதிர்ப்புக்குழுவினர் தோல்வியுற்றனர். ஆயினும் அவர்கள் தமது கோரிக்கைகளை முற்றாகக் கைவிடவில்லை.

1932ஆம் ஆண்டு டி வலெரா அயர்லாந்தின் பிரதமரானார். பிரிட்டிஷ் முடியாட்சிக்கு விசுவாசப் பிரமாணம் செலுத்துதல் என்பது நீக்கப்பட்டது. மேலும் 1938 ஆம் ஆண்டு, அயர்லாந்திலிருந்த பிரிட்டிஷ் தளங்கள் அகற்றப்பட்டதுடன் தேசாதிபதிக்குப் பதிலாக அயர்லாந்துக்குப் பொறுப்பான ஜனாதிபதி என மாற்றம் கொண்டுவரப்பட்டது. 1938 ஆம் ஆண்டு irish Free State என்பதற்குப்பதிலாக அயர்லாந்து என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக 1948 ஆம் ஆண்டு அயர்லாந்துக் குடியரசு என பிரகடனப்படுத்தப்

20