பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தான்பிரீன் பற்றி

- உதயன்




போராட்டம் வளர்ச்சியடையும்போது அதனைத் தணிப்பதற்குக் காலம் கடத்தல், சில சலுகைகளைக் கொடுத்தல் போன்ற ஏமாற்றுக்களை செய்வதில் ஆங்கில ஆட்சியாளர் மிகவும் கைவந்தவர்கள். Kill by Kindness என்ற கன்சர்வேடிவ் கட்சியின் சொற்றொடர் இங்கு கவனிக்கத்தக்கது. முதலாளித்துவ வர்க்கம் பற்றிப் பொதுவாகவும், அதில் ஆங்கில ஆட்சியாளர் பற்றிக் குறிப்பதாகவும் வி. ஐ. வெனின் தனது The Task of the Proletariat in our Revolution என்னும் நூலிற் குறிப்பிட்ட கருத்தினை இங்கு அவதானித்தல் பொருத்தமுடையதாகும் : "பூர்சுவா, நிலப்பிரபுத்துவ அரசாங்கங்கள் உலகளாவிய அனுபவத்திலிருந்து அவை பொது மக்களை அடக்கி ஆள்வதற்கு இரண்டுவித வழிகளைக் கையாள்கின்றன. முதலாவது வழி பலாத்காாமாகும். முதலாம் நிக்கலஸ், இரண்டாம் நிக்கலஸ் ஆகிய ரஷ்ய மன்னர்கள் கையாண்ட அலுகோஸ் நடைமுறைகள் எதெதனை இந்தப் பலாத்கார வழி மூலமும் சாதிக்கலாம், அதன் எல்லை வரம்புகள் என்ன என்பதை இரத்தம் தோய்ந்த முறையில் எடுத்துக்காட்டியுள்ளனர். ஆனால் இன்னொரு வழியும் இருக்கின்றது. இதனை ஆங்கில, பிரஞ்சு பூர்சுவா வர்க்கங்களே மிகவும் நேர்த்தியாக வளர்ந் தெடுத்துள்ளன. இவர்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த மாபெரும் புரட்சிகள் மூலம் ஜனங்களின் புரட்சிகர இயக்கங்களின் மூலமும் பாடத்தைக் கற்றுக் கொண்டனர். ஏமாற்று வித்தைகளையும் முகஸ்துதிகளையும், அழகான சொற்தொடர்களை இந்தவழி இலட்சக்கணக்கில் வாக்குறுதிகளை அள்ளிவீசும். ஆனால், கொடுப்பதோ ஒரு சில எலும்புத் துண்டுகள், சில சலுகைகள்.

22