ப. ராமஸ்வாமி
அத்தோட்டத்தினுள்ளே வாசலிலிருந்து 300 அடி தூரத்தில் ஒரு பெரிய மாளிகை இருக்கிறது. ஆங்கில மன்னனின் பிரதிநிதியாக அயர்லாந்திலுள் வைசிராய் (Viceroy - பதில் ஆளுநர்) சில சமயங்களில் தங்குவதற்காக அது அமைக்கப்பட்டிருந்ததால் அதற்கு 'வைசிராய் லாட்ஜ்' என்று பெயர். ஆண்டவனையும் அதனையும் தெருக்களையும் ரயில் நிலையத்தையும் பற்றி மேலே விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதன் காரணம் என்னவெனில் வெகு சீக்கிரத்தில் அங்கு ஒரு போராட்டம் நடப்பதைக் காணப்போகிறோம். ஆதலால் முன்னதள்கவே திசைகளைத் தெரிந்துகொள்வது நல்லதல்லவா?
1919ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியிருக்கும். டப்ளின் நகரிலிருந்து வாலிபர்கள் சிலர் துப்பாக்கி முதலிய ஆயுதங்களைத் தங்கள் உடைகளில் மறைத்து வைத்துக் கொண்டு சைக்கிள் வண்டிகளில் விரைவாக ஆஷ்டவுனை நோக்கி வந்தார்கள். எல்லோரும் வந்தால் பிறர் சந்தேகித்து விடுவார்கள் என்ற காரணத்தால் அவர்கள் தெருவில் இருவர் இருவராகப் பிரிந்து வந்தார்கள். ஆஷ்டவுனுக்கு வந்தவுடன் அவர்கள் யாவரும் கெல்லியின் விடுதிக்குள் சென்று அமர்ந்தார்கள். அவர்கள் மொத்தம் பதினொருபேர். மிகுந்த கம்பீரத்துடனும் வானமே இடிந்து விழுந்தாலும் கலங்காத உள்ளத்துடனும் விளங்கிய தான்பீரின் அவர்களுக்குத் தலைவன். அவன் முப்பது வயதுக்குள்ளிட்ட பிராயத்தினன். தலைவனுக்குரிய அருங்குணங்களையெல்லாம் அணிகலன்களாய் பெற்றவன். ஸின்டிரிஸ், ராபின்லன், வேராகன், டாலி, மக்டொன்ன, கியோக், லியனார்டு, கில்காயின், வைரன், லாவேஜ் என்பவர்கள் மற்ற பதிர்மர்கள். இவர்களில் லாவேஜ்தான் வயதில் மிக இளையவன். அவன் பால்மனம் மாறாத பச்சிளங் குழந்தை. வீர உள்ளமும் தாய்நாட்டின் மீது தணியாத காதலும் பெற்று விளங்குவது போன்ற முகத்தோற்றமுடையவன். அவனுடைய முழுப்பெயர் மார்டின் லாவேஜ்.
இந்தக் கூட்டத்தினரைச் சூழ்ந்து வேறு பல தொழிலாளர்களும் குடியானவர்களும் குடித்துக் கொண்டிருந்தார்கள். யாரும் அவர்களைக் கண்டு சந்தேகப்படவில்லை. அவர்கள் எந்த நோக்கத்துடன் கூடியிருக்கிறார்கள் என்றோ அவர்கள் அனைவரும் ஒரே கூட்டத்தார் என்றோ எவருக்கும் தெரியது. இனிய பாணவகைகளை வாங்கிக் குடிப்பதில் நேரத்தை போக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவரை ஒருவர் அப்பொழுதுதான் சந்தித்தவர்களைப் போல் அவர்களது சம்பாஷணை இயற்கையாயிருக்கவில்லை. முழுதும் செயற்கையாகப்பட்டது. ஆடு, மாடுகள், உழவு, நாற்று நடுகை, நிலங்கள் முதலிய பல விஷயங்கள் பற்றி அவர்கள் பேசினார்கள். ஆனால் மறந்தும் அரசியலைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. எல்லோரும் வெகு ஜாக்கிரதையுடன் இருந்தார்கள். ஏனெனில் பேசியவர்களுக்கு விவசாயத்தில் ஒன்றுமே தெரியாது. ஆனால் சூழ வீற்றிருந்தவர்களோ வாழ்நாள் முழுதும் விவசாயத்தில் திளைத்த வாலிபர்கள். தவறுதலான வார்த்தைகள் வெளிவராது மிகுந்த நிதானத்துடன் பேசினார்கள்.
25