பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


குத் தெரியக்கூடாதோ அவர்களுக்கு மட்டும் எப்படியோ தெரிந்திருந்தது. கெல்லியின் விடுதியில் தங்கிக்கொண்டிருந்த பதினொரு பேர்களுக்கும் பகல் 11-40 மணிக்கு ஆஷ்டவுன் ரயில் நிலையத்தில் வைசிராய் தங்குகிறார் என்பது தெரியும். அதற்காகத்தான் அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே அவர்கள் புறப்பட்டு வந்து விடுதியில் காத்திருந்தனர்.

வைசிராயின் ரயில் வருவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்னால் துப்பாக்கிகள் ஏந்திப் பட்டாளத்தார் நான்கு ராணுவமோட்டார் லாரிகளில் பீனிக்ஸ் தோட்ட வாயிலிருந்து வெளியேறி கெல்லியின் விடுதிப்பக்கமாக ரயில் நிலையத்திற்குச் சென்று அணிவகுத்து நின்றனர். இவர்களைத் தவிர வேறு பல ஆயுதந்தாங்கிய டப்ளின் நகரப்போலீஸார் பீனிக்ஸ் தோட்டவாயிலிலிருந்து வைஸ்ராய் லாட்ஜ் வரையிலும் வீதியைப் பாதுகாத்து வந்தனர். குறித்த நேரத்தில் ரயில் வண்டி ஆஷ்டவுன் ஸ்டேஷனில் வந்து நின்றது. இரண்டு மூன்று நிமிஷங்கள் கழிந்தன. ஸ்டேஷன் வீதியில் மோட்டார் கார் கிர்... கிர் என்று வேகமாய் ஓடி வரும் சத்தம் கேட்டது. விடுதியிலிருந்த பதினொரு பேர்களும் மெதுவாக வெளியே வந்து முன்னதாகவே ஏற்பாடு செய்திருந்தபடி, தத்தமக்குரிய இடத்தில் போய் நின்றனர். அவ்விடுதிக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த ஓர் உர வண்டியின் பக்கம் தான்பிரீனும், கியோக்கும், லாவேஜூம் சென்று அதை இழுத்தனர். அது மிகக் கனமான வண்டியாதலால் மிகவும் சிரமப்பட்டு இழுக்கவேண்டியிருந்தது. அவர்கள் அதைப் பலமாக இழுத்து ஸ்டேஷன் வீதிக்குக் கொண்டு சென்றனர். அப்பொழுது முதன் முதலில் அங்கு வந்து நின்று கொண்டிருந்த போலீஸ்காரன் கூக்குரல் போட ஆரம்பித்தான். 'யார் அங்கே வைசிராய் வரப்போகிறார் விலகு விலகு என்று அவன் கூறினான். அந்த ஆசாமிகளோ, தாங்கள் மட்டுமின்றி உரவண்டியையும் சேர்த்து இழுத் துச்சென்றனர்.

அவர்களுக்கு வைசிராய் வரப்போவது நன்றாய்த் தெரியும். தெரிந்ததினால் தான் சரியான சமயத்தில் வண்டியை இழுத்தார்கள். அவர்களுக்கு வைசிராயினிடத்தில் வேலை இருந்தது. அது போலிஸ்காரனுக்கு எப்படித் தெரியும்? நேரமோ பறந்து கொண்டிருந்தது. ஒரு விநாடி ஒரு யுகமாகத் தோன்றியது. கரணம் தப்பினால் மரணம். உரவண்டியை வீதியின் மத்தியில் உருட்டினால்தான் வைசிராயின் கார் நிற்கும். அதற்குத் தடை ஏற்பட்டால் அவர்கள் காரியம் வீணாகிவிடும். போலீஸ்காரன் கண்டித்து ஏசிக்கொண்டேயிருந்தான். தான்பிரீன் இடைவிடாது வண்டியை இழுத்துக்கொண்டே யிருந்தான். அவனும் நண்பர்களும் கைகளில் துப்பாக்கி வைத்திருந்ததைப் போலிஸ்காரன் கண்டு பிடிக்கவில்லை...

அக்காலத்தில் ஜனங்கள் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள உரிமை கிடையாது. போலீஸ்காரனோடு வாதாடுவதில் பயனில்லை யெனினும் அவன் வாயை மூடுவதாகவும் இல்லை. துப்பாக்கியை எடுத்து அவன் வாயை அடக்

28