பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


கலாம் என்றால் ஒரு விஷயம் அறியாத அவனைச் சுடுவதால் என்ன பயன்? மேலும் குண்டோசைகேட்டவுடன் வைசிராயின் பாதுகாப்புக்காக நிற்கும் பட்டாளத்தார் அங்கு ஓடிவந்திருப்பார்கள். இவ்வாறெல்லாம் எண்ணமிட்டான் தான்பிரீன். போலீஸ்காரனை வார்த்தைகளால் பயமுறுத்திக்கொண்டே வேலையை நிறைவேற்றிவந்தான். அவன் வேலை என்ன? உரவண்டியை விதியில் இழுத்துச்சென்று ஸ்டேஷனிலிருந்து கார்கள் வரும்பொழுது முதல் மோட்டாரை விட்டு விட்டு, இரண்டாவது மோட்டாருக்கு முன்னால் வண்டியைத் தள்ளி வழியை மறித்து நிறுத்திவிட வேண்டும். அதற்கு உதவியாக மற்ற இரு நண்பர்களும் கூட இருந்தனர். போலீஸ்காரன் கடைசிவரை தன்னுடைய கூக்குரலை நிறுத்தாததைக் கண்டு வீதியின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒருவன், தான்பிரீனுக்கு உதவி செய்யவேண்டுமென்று தன்கையிலிருந்த ஒரு வெடி குண்டைப் போலிஸ்காரன் மீது குறிவைத்து எறிந்துவிட்டான். இது பொருத்தமில்லாத வேலை. ஏனென்றால் குண்டோசைகேட்டால் லார்ட் பிரெஞ்ச் அந்தப்பாதையிலேயே வராமல் மாற்றப்பட்டுவிடும். இவை ஒன்றையும் கவனியாது அவ்வாலிபன் ஆத்திரத்தில் குண்டை எரிந்துவிட்டான். நல்லவேளையாக அது போலீகாரனுக்கு அதிக காயத்தை உண்டாக்கவில்லை. அவன் தலையில் மட்டும் சிறிது காயப்படுத்தியது. தான்பிரீனும் அவன் நண்பர்களும் ஒரு நிமிஷத்தையும் வீணாக்கக் கூடாதென்றும், வருவது வட்டும் என்றும் துணிந்து நின்றனர். வைசிராயின் சாரணன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் முன்னதாகச் சென்றான். அடுத்தாற்போல் ஒருகார் வந்தது. பதினொரு பேர்களும் பல திசைகளிலிருந்தும் அதன்மேல் சுட ஆரம்பித்தனர். உடனே வண்டியிலிருந்தவர்களும் எதிர்த்துச் சுட்டனர். ஒரு குண்டு தான்பீரினுடைய தலையில் பட்டு அவனுடைய தொப்பியை அடித்துக் கொண்டு போய்விட்து. தலையில் காயமில்லை. கார்சென்ற வேகத்தில் அதனுள் யார் யார் இருந்தனர் என்பதைக் கவனிக்கமுடியாது போயிற்று. வெளியே நின்றவர்களுக்கு அவர்களைப் பற்றிய கவலையும் இல்லை. ஏனெனில் இரண்டாவது காரிவில்தான் வைஸ்ராய் வருவார் என்று அவர்களுக்குத் தெரியும். முதல் காரைச் சுட்டால் அதிலுள்ளவர்கள் அதை வேகமாய் ஓட்டிச் சென்று விடுவார்கள். பின் சாவகாசமாக இரண்டாவது காரை எதிர்க்கலாம் என்பது அவர்கள் வண்ணம் அவர்கள் எண்ணியபடியே முதல் கார் வாயு வேகத்தில் பறந்து சென்றது. தான்பியின் வண்டியை வீதியை மறித்து நிறுத்திவிட்டான். இரண்டாவது காரும் வந்துவிட்டது. தான்பிரீனும் அவனுடைய கூட்டத்தாரும் நாலு பக்கத்திலுமிருந்து அதன் மேல் ரிவால்வர்களால் சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசி எரிந்தனர். கார்மீது நெருப்பு மழை பெய்வது போலிருந்தது. ஆனால் காருக்குள்ளிருந்தவர்களிடம் யந்திரத்துப்பாக்கியும் இருந்தது. அதனாலும் நீண்ட துப்பக்கிகளாலும் அவர்கள் சுட்டனர். வெளியே நின்றவர்களிடம் ரிவால்வர்களும் வெடிகுண்டுகளுமே இருந்தன. தான்பிரீனும் அவனுடன் வண்டிப் பக்கம் நின்ற இருவரும் மிகுந்த அபாயகரமான நிலையிலிருந்தனர். பகைவர்கள் துப்பாக்கிகள் அவர்களைக்

20