2
தொண்டர் படை
ஐரோப்பிய யுத்தம் 1914ஆம் ஆண்டு ஆம்பமாயிற்று. மனித சமூகத்தின் வளர்ச்சியில் - நாகரிகத்தில் - இந்த யுத்தம் மிகமுக்கியமான இடம் பெற்றிருக்கிறது. இதுகாறும் நாம் அரசியல் புரட்சிகளையும். சமூகப் புரட்சிகளையும், ஒடுக்கப்பட்டோர் புரட்சிகளையும், பொதுவாகத் தேசப்புரட்சிகளையும் பற்றியே கேட்டிருக்கிறோம். ஐரோப்பிய யுததம் உலகப் புரட்சிக்கு வித்தாக அமைந்ததே விந்தையாகும். அதை ஆம்பித்தவர்களும் அவ்வாறு ஏற்பட வேண்டுமென்று கனவிலும் கருதவில்லை. சிறிய தேசத்தார்களுடைய சுதந்திரங்களைப் பாதுகாக்கவும், உடன்படிக்கைகளின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், உலக சமாதானத்தைப் பாதுகாக்கவும் அவர்கள் போராடுவதாகக் கூறி வந்ததில் எவ்வளவு உண்மை உண்டென்பதை உலகம் தெரிந்து கொண்டது. யுத்தத்தில் பலநாடுகள் தங்களுடன்படிக்கைகளைக் காற்றில் பறக்க விட்டதை நாம் கண்ணாற் கண்டோம். சிறு நாட்டார்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தொடுக்கப்பட்ட அறப் போரின் பெரிய நாட்டார்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. யுத்தத்தில் சம்பந்தப்பட்ட வல்லரசுகள். தாங்கள் முன்னதாக அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளுக்குப் பிறப்புரிமையாகிய சுதந்திரத்தைக் கொடுக்க மறுத்துத் தங்களுடைய பிடியைத் தளர்த்துவதற்குப் பதிலாக உறுதிப்படுத்தின. புதிய நாடுகளைப் பிடிப்பதில் தங்களுக்குள்ள ஆசையையும் வெறியையும் அவைகள் மறைக்கவும் இல்லை அறத்தை
நிலைநாட்
33