உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


டவும் மானிட சமுதாயத்தின் சுதந்திரத்தைக் காப்பாற்றவும் யுத்தம் தோன்றியதாகக் கூறினார்கள். யுத்தத்தில் கலந்துகொண்ட அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் தீவுகளின் சுதந்திரத்தைப்பறித்து அவற்றை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தது. ஜப்பான், கொரியாதேசத்தின் மேல் ஆதிக்கம் செலுத்திவந்தது. ஜெர்மனி, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் தன் கைவசமுள்ள பிராந்தியங்களை விடுவிக்கப் பிரியப்படவில்லை. ஜார்சக்கரவர்த்தியின் ரஷ்யா மண் வெறியே உருவாக விளங்கியது. இந்தியா, எகிப்து, அயர்லாந்து நாடுகளை இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இதனை வல்லரசுகளும், சந்திரனைப்போல் தங்கள், குறைதெரியாமல், பிறர் குறைகளை களையும் நோக்கத்துடன் போராடின. இடைவிடாது நான்கு ஆண்டுகள் போராடி உயிரையும் பொருளையும் ஆற்று நீரைப்போல் அள்ளிக்குடித்தன. ஐரோப்பிய யுத்தத்தில் 97,43,914 பேர் மடிந்தனர். 2,09,27,456 மக்கள் காலிழந்தும், கையிழந்தும், கண்ணிழந்தும் அங்கங்களையிழந்தனர். முப்பது இலட்சம் பேர் போன இடமே தெரியவில்லை. மொத்தம் ஏழாயிரம் கோடி பவுண்டு செலவழிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு உதிரத்தையும் பொன்னையும் பலியாக விழுங்கிய யுத்தத்தின் முடிவு என்ன?

பிரிட்டிஷ் பிரதம மந்திரியான லாயிட் ஜார்ஜ் உலகத்தில் யுத்தத்தைத் தொலைப்பதற்கே இந்த யுத்தம் தொடுக்கப்பட்டதாக ஒருமுறை, இருமுறையல்ல 76 முறை உலகறியக் கூறினார். பிறநாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் வல்லரசுகள் உண்மையில் உலக சமாதானத்திற்காக உழைக்க முடியுமா? உழைத்தாலும் அது பலிக்குமா? யுத்தத்திற்கு இந்தியா பதினான்கு இலட்சம் மனிதர்களையும் இருபதினாயிரம் பவுண்டையும் கொடுத்து உதவியது. அயர்லாந்து 1,34,000 வீரர்களை யுத்தத்திற்குக் கொடுத்தது. ஆனால் யுத்த முடிவில் இந்தியாவும் அயர்லாந்தும் என்ன நிலைமையில் இருந்தன? இந்தியா யுத்தத்திற்கு பின்புதான் அதன் பாடத்தைக் கற்றுக்கொண்டது. அயர்லாந்து யுத்தம் ஆரம்பத்திலேயே உண்மையைத் தெரிந்துகொண்டது. முதல் ஆண்டிலேயே அது தனது சுதந்திரப்போராட்டத்தை தீவிரமாய் நடத்த ஆரம்பித்து விட்டது.

அயர்லாந்து சிறிய தீவு. உலகில் பெரிய ஏகாதிபத்தியத்தையுடைய "கடலரசி“ இங்கிலாந்தை எதிர்த்து அயர்லாந்து சுதந்திரத்தைப் பெறுவது எங்ஙனம்? இங்கிலாந்துக்கு வெளியிலிருந்து ஒரு பெரிய ஆபத்து ஏற்படும் பொழுது அந்நியர் அதைத் தாக்கும்பொழுது, அயர்லாந்து அதை எதிர்த்துப் போராடினால் ஒரு வேளை வெற்றியடையக்கூடும். ஏனெனில் இங்கிலாந்து தன் முழுவலிமையுடன் அதை எதிர்த்து நிற்க அப்போழுது இயலாது போகும். இந்த நோக்கங் கொண்டே அயர்லாந்து 1914 ஆம் ஆண்டு முதல் தனது போராட்டத்தை ஆரம்பித்தது. அதன் தலைவர்கள் ஆங்கில ராஜதந்திரிகளுடைய பசப்பு வார்த்தைகளை நம்பவில்லை. ஒரு வல்லரசு துன்பத்தில் ஆழ்ந்திருக்கும்பொழுது அதன் வாயில் இருந்து உண்மை, உரிமை, உடன்படிக்கை முதலிய இனிய சொற்கள் வெளிவந்தபோதிலும், பின்னால் துன்பம் நீங்கிய காலையில் அவை

35