பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


காலடியில் மிதிபட்டு இழிவடையும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்கள் போரை விரும்பினார்கள்; போரையும் உடனேயே வேண்டினார்கள்.

1914ஆம் ஆண்டு அயர்லாந்தில் மூன்று விதமான பட்டாளங்கள் இருந்தன. ஒன்று அயர்லாந்தை அடக்கிப் பிரிடிஷ் ஆதிக்கத்தை நிலைநாட்ட உபயோகிக்கப்பட்ட ஆங்கில ராணுவம்; மற்றொன்று ஆரஞ்சுப்படை மூன்றவது ஐரிஷ் தொண்டர்படை அயர்லாந்தின் வட பாகத்திலுள்ள அல்ஸ்டர் மாகாணத்தார் தங்களுக்குத் தனி உரிமைகள் வேண்டுமென்றும், மற்றப்பக்கத்தாரோடு சேர்ந்து வாழமுடியாதென்றும் கூறி, தம் நாட்டாரையே எதிர்ப்பதற்காக ஆரஞ்சுப் படையை வைத்துக்கொண்டிருந்தனர். ஆங்கில அரசாங்கத்தார் அல்ஸ்டர்வாசிகளைத் தங்களுக்குப் பக்கபலமாக வைத்துக் கொண்டிருந்தனர். ஐரிஷ் தொண்டர் படை என்பது தேசியவாதிகளான மிதவாதிகளுடைய ராணுவம். அதை ஸின்பீன் படை என்றும் சொல்வதுண்டு. அயர்லாந்து பூரண சுதந்திரம் பெற்றுக் குடியரசை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் போராடுவதற்காக அந்தப் படை அமைக்கப்பட்டிருந்தது.

யுத்த ஆரம்பத்தில் பிரிட்டிஷ் பார்லிமென்டார் அயர்லாந்துக்கு ஒரு சுய ஆட்சி மசோதாவை நிறைவேற்றி வைத்திருந்தனர். அந்தச் சொற்பச் சீர்திருத்தத்தைக்கூடக் கொடுக்கக்கூடாது என்று அல்ஸ்டர்வாசிகள் எதிர்த்தனர். டப்ளின் நகரத்தில் ஒரு பார்லிமென்ட் ஏற்படுத்தப்பட்டாலும், தாங்கள் உயிருள்ளவரை அதை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் கூறினார்கள். தங்களுக்கு ஒரு தனியான பாலிமெண்டும் தனி அரசியலும் வேண்டுமென்று கோரினார்கள். அயர்லாந்துக்கு சுயராஜ்யமே கொடுக்கக்கூடாதென்று பிடிவாதமாகக் கூறிவந்த பெருஞ்செல்வர்களான ஆங்கில கன்ஸர்வேட்டிவ் கட்சியர் அல்ஸ்டர் வாசிகளுக்குப் பொருளுதவியும் பிற உதவிகளும் செய்து அவர்களைப் பிரிட்டிஷ் பார்லிமென்டுக்கே விரோதமாகத்தூண்டி விடுவார்கள். அல்ஸ்டார்வாசிகள் துணிவுடன் முன்வந்து வெளிப்படையாக யுத்தப் பயிற்சி பெற்று, ஆயுதம் தாங்கி, ஆரஞ்சுப்படையை அமைத்துக் கொண்டார்கள். அக்காலத்தில் லின்பின் இயக்கம் அயர்லாந்தில் அதிகச் செல்வாக்கைப் பெற்றிருக்கவில்லை. டப்ளின் தலைநகருக்கு வெளியே அதைப்பற்றி ஜனங்களுக்கு அதிகம் தெரியாது. ஐரிஷ் பிரமுகர்களில் பெரும்பாலார் பார்லிமென்டில் சென்று கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். அவர்களுக்கு ஜான் ரெட்மெண்டு என்பவர் தலைவர். யுத்த ஆரம்பத்தில் அவர் தமது அமிதவாதத்தை எல்லாம் பறிகொடுத்துவிட்டு, பிரிட்டிஷாருக்கு உதவிப் பட்டாளம் சேர்த்து அனுப்பிக் கொண்டிருந்தார். அவரைப் பின்பற்றியவர்களும் அதே வேலையில் ஈடுபட்டார்கள். ஆரஞ்சுப் படையையோ, முற்றிலும் ஆங்கிலேயருக்கு அநுகூலமானது. இந்நிலையில் அயர்லாந்தின் சுதந்திரத்தைப் பெறவும், ஆங்கிலேயப் படையையும் ஆரஞ்சுப்படையையும் எதிர்த்து நின்று போராடவும் ஒரு தேசியப்படை அவசியம் என பிர்சி, மக்னில் முதலிய தலைவர்கள் கருதினார்

35