உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கள். அவர்களுக்கு நாட்டில் அதிகச் செல்வாக்கு இல்லாதிருந்தபோதிலும் ஐரிஷ் வாலிபர்கள், அவர்களுடைய கருத்தை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டு, ஐரிஷ் தொண்டர்படையை அமைத்தனர். ஜெர்மனியுடன் இங்கிலாந்து போராடுவது தர்மத்திற்காக அன்று என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒரே கனவு தாய்நாடு விடுதலை பெற்று சுதந்திரக் காற்று வீச வேண்டும் என்பதே.

டோனோஹறில் என்னும் கிராமத்தில் தான்பிரீன் 1914 ஆம் ஆண்டு ஐரிஷ் தொண்டர்படையில் முதன் முதலாகச் சேர்ந்து கொண்டான். அவனுடைய சொந்த ஊர் திப்பெரரி நகரம். அவனுக்கு அப்போழுது வயது இருபது. அக்காலத்திலேயே அவனைப் போலிஸார் புரட்சிக்காரன் என்று கவனித்து வர ஆரம்பித்தனர். அவனும் அவன் நண்பர்களும், ஆங்கிலப்படையில் சேரவேண்டுமென்று ஜான் ரெட்மண்ட் கூறிவந்ததைச் சிறிதும் கவனியாமல், தங்களுடைய வேலையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மைதானங்களில் கூடி வெளிப்படையாகத் தேகப்பயிற்சி, யுத்தப் பயிற்சி முதலியன செய்து வந்தார்கள். எப்பொழுதாவது ஒரு காலம் வரும், அக்காலத்தில் தங்கள் பகைவனை ஒரு கை பார்க்கலாம் என்பதே அவர்களுடைய நம்பிக்கை. அவர்களுடைய பகைவன் இங்கிலாந்தைத் தவிர வேறெவருமில்லை.

யுத்தம் வளர வளரப் போலிஸார் அவர்களை மிகவும் நெருக்கமாகக் கவனித்து வந்தனர். அவர்கள் ஜெர்மானியர்களிடம் அதுதாபமுடையவர்கள் என்று பறை சாற்றப்பட்டது. பத்திரிகைகளில் ஜெர்மானியர்கள் மனிதத்தன்மையையே கைவிட்டு அநாகரிகமான கொடுமைகளைச் செய்து வந்ததாகப் பொய்யும் புரட்டும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததால், ஐரிஷ் ஜனங்கள் அவர்களை வெறுத்து, ஆங்கிலேயரிடம் அனுதாபம் காட்டி வந்தனர். பணக்காரர்களும், கொழுத்த வியாபாரிகளும் பெரிய குடியானவர்களும் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார்கள். ஆனால் ஐரிஷ் தொண்டர் படையிலுள்ளவர்கள் ஆங்கிலேயருக்கு எவ்வித உதவியும் செய்ய மறுத்துவிட்டனர். ஆங்கில யுத்த வீரர்களுக்குச் செளகரியங்கள் அமைத்துக் கொடுப்பதாக ஐரிஷ் போலிஸார் சில நிதிகள் சேர்த்து வந்தனர். தான்பிரீன் அந்த நிதிக்கு உதவி செய்ய மறுத்து விட்டான். அதனால் போலிஸார் அவனிடம் வெறுப்படைந்தனர். அப்பொழுது தான்பிரீன் ஒரு பெரிய ரெயில்வே கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். போலிஸார் அவனுடைய மேலதிகாரிகளிடம் இதுபற்றி புகார் செய்தனர்.

ஐரிஷ் போலீஸ் படையைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். மற்ற நாடுகளிலுள்ள போலீஸ் படையைப் போலில்லாமல் அது விசேஷ ராணுவப் பயிற்சி பெற்று அயர்லாந்தில் சாதாரணமான குற்றங்களை அதிகமாயில்லாமையால் சுதந்திர விருப்பம் கொண்ட தொண்டர்களைப் பின்பற்றிச்

36