உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


அனைவரும் ஒரே மாதிரியான பச்சைநிற உடை தரித்து டிவலெராவுக்கு மெய்க் காப்பாளராக நின்றனர். அப்பொழுது திப்பெரரியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்கள் தங்கியிருந்தனர். அதனால் தான்பிரீன் படையினர் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லமுடியவில்லை. அவற்றிற்குப் பதிலாக நீண்ட தடிக் கம்புகளை வைத்திருந்தனர். அக்காலத்தில் ராணுவத்தைப்போல் அணிவகுத்துச் செல்வதும், ஒரேமாதிரியான ராணுவ உடையணிவதும், கைகளில் தடிக் கம்பு வைத்திருப்பதும் குற்றமென்று அரசாங்கம் விளம்பரப்படுத்தியிருந்தது. தடிகளையும் தடைசெய்து விளம்பரஞ் செய்யப்பட்டது மிகவும் வியப்பாகும்! அதன் வரலாற்றைக் கவனிப்போம்.

டப்ளின் நகரத்திலே ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இங்கிலாந்திலுள்ள ஐரிஷ் கைதிகள் மிகவும் கேவலமாக நடத்தப்படுவதைக் கண்டிக்கவே அக் கூட்டம் கூடியது. பிளங்கெட் என்பவரும் கதால் புருகா என்பவரும் பிரசங்கம் செய்தார்கள். அப்பொழுது டப்ளின் நகரப்போலிஸைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மில்ஸ் என்பவர்.அந்த அமைதியான கூட்டத்தைக் கூடவிடாமல் கலைக்க முயன்றார். அக்கூட்டத்தில் ஹாக்கி விளையாட்டிற்குச் செல்லக்கூடிய வாலிபர்களும் விளையாடி விட்டுத்திரும்பிய வாலிபர்களும் பலர் இருந்தனர். இன்ஸ்பெக்டர் கூட்டத்தைக் கலைத்துப் பேசுகிறவர்களைக் கைது செய்ய வேண்டுமென்று முயற்சித்தபொழுது அவர்மேல் ஒரு ஹாக்கி மட்டை எறியப்பட்டது. அவர் காயங்களடைந்து பின்னால் அக்காயங்களால் இறந்து போனார். இதிலிருந்து அயர்லாந்திலுள்ள பிரிட்டிஷ் துருப்புக்களின் சேனாதிபதியாகிய சர் பிரியான் மாகன், யாரும் தெருக்களில் ஹாக்கிக் மட்டைகளைக் கொண்டுசெல்லக் கூடாது என்று சட்டம் போட்டு விட்டார்; மனிதர்கள் கம்பு ஊன்றி நடக்கக்கூடாது என்று சட்டமிடுவது எவ்வளவு கேவலமோ, அதைப்போன்றது. இந்த அநாகரிக உத்தரவும். இந்தச்சட்டம் போடுவதற்கு முன்னால் ஜனங்கள் அதிகமாய்த் தடிகள் வைத்திருப்பதில்லை. ஆனால் அதற்குப்பின்னால் நாடு, நகரம் எல்லா இடங்களிலும் ஜனங்கள் ஹாக்கித்தடிகளைத் தாங்கிச் சென்றனர். முன்பின் தடிகள் வைத்திருக்காதவர்களும் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டனர்.

தான்பிரீன் கூட்டத்தார் திப்பெரரியில் ஹாக்கித் தடிகளைத் தாங்கி ராணுவ உடையில் அணிவகுத்துச் சென்றது, பகைவர்களுக்குக் கலகத்தை உண்டாக்கியதைப் போலவே நண்பர்களுக்கும் கலக்கத்தை உண்டாக்கியது. உள்ளூரில் இருந்த ஸின்பீனர்கள் அதைக்கண்டு திடுக்கிட்டுப்போயினர். அப்போழுது ஸின்பீன் கட்சிக்கு மிகுந்த ஆதரவு ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் அதில் சேர்ந்தனர். ஆனால் அவர்கள் தீர்மானங்களைத் தவிர வேறு ஆயுதங்களையும் உபயோகிக்கத் தயாராக இருக்கவில்லை. திப்பெரரியிலிருந்த ஸின்பீனர்கள் தான்பிரீன் கூட்டத்தாரிடம் அதிருப்தி கொண்டதன் காரணம் என்னவெனில் அவர்கள் கூட்டம் கூடித்தர்க்கம் செய்து ஒரு நீண்ட தீர்மானம் இயற்

39