பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


மிகுந்த தாழ்ந்தபடியிலுள்ளவர்கள். அவர்களுக்கே சிறைத் தண்டனை நரக வேதனையாகும். ஆனால் அரசியல் போராட்டத்தில் உயர்ந்த ஒரு கொள்கைக்காக பிறப்புரிமையாகிய சுதந்திரம் பெறுவதற்காக வாழ்வு, செல்வம், பெருமை அனைத்தையும் துறந்து வெளியேறும் தியாகிகளையும் சிறையிலடைப்பது எவ்வளவு அநாகரீகம். ஆனால் உலகம் தோன்றிய நாள்முதல், அரசியலில் மாறுபட்ட கருத்துக்கொண்டவர்களுக்கும் பழையமூப்படைந்த மூடக் கொள்கைகளை எதிர்பவர்களுக்கும் சிறையே வீடாக அமைந்துள்ளது. விதை கெடாமல் முளைவராது. பிறர் நலம் பேணுவோர் சிலுவையைத் தாங்கித் துன்புறாமல் முடியாது. ஆதலால் நல்லோருடைய யாத்திரா மார்க்கத்தில் சிறை ஒரு படை வீடு: பயிற்சி நிலையம். ஆனால் சிறையில் தேசபக்தர்களுக்கு, ஆடும், மாடும் உண்ண மறுக்கும் ஆபாசமான உணவு கொடுக்கப்பட்டால் யாரிடம் முறையிடமுடியும்? உண்ணாவிரதம் என்னும் உயரிய ஆயுதம் மட்டுமே மட்டுமே அவர்களுக்கு ஆபத்தில் உதவுகிறது. இந்த ஆயுதத்தை அயர்லாந்தின் வீரர்களும் பல சமயம் உபயோகிக்கும் படி நேர்ந்தது.

ஸின் முதலிய ஐரிஷ் தேசபக்தர்கள் தாங்கள் அந்நிய அரசாங்கத்தால் மிருகங்களிலும் கேவலமாக நடக்கப்பட்டதை எதிர்த்துப் போராட உண்ணாவிரதத்தையே மேற்கொண்டனர். அவர்கள் யுத்தக் கைதிகள். யுத்தக் கைதிகளுக்குரிய மரியாதையையே அவர்கள் வேண்டினார்கள். ஆனால் அரசாங்கத்தார் அவர்களை டப்ளின் நகரச் சிறையில் கொண்டுபோய் வைத்தார்கள். உண்ணாவிரதம் நின்றபாடில்லை. அங்கு அதிகாரிகள் அவர்களுக்குப் பலவந்தமாய் உணவு ஊட்டினார்கள். இக்கொடிய முறையால் மிக்க வீரமுள்ள புரட்சித்தலைவரும் 1916 ஆம் வருடத்திய கலகத்தில் தலைமை தாங்கி நின்றவருமான தளகர்த்தர் டாம் ஆன் உயிர்துறந்தார். இந்தக் கொலை, தேசத்தை எழுப்பி விட்டது. ஜனங்கள் கோபங்கொண்டு பொங்கினர். ஐரிஷ் தேசபக்தர்கள் எண்ணியதை நிறைவேற்றும் உறுதியுடையவர்கள் என்பதையும் அப்பொழுது முதன் முறையாக அரசாங்கத்தார் தெரிந்து கொண்டார்கள். இதன் பின்பு அரசாங்கத்தார் உண்ணாவிரதம் இருந்தவர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ள இசைந்தனர். அது முதல் அவர்களை அரசியல் கைதிகளாக, யுத்தக் கைதிகளாக நடத்துவதாக அரசாங்கத்தார் உறுதி கூறினர். பின்னால் பலவந்தமாக உணவூட்டும் முறை கையாளப்படவில்லை.

ஸின் சிறையின் புழுங்கிய காலத்தில் அவன் தோழன் தான்பிரீன் சும்மா இருக்கவில்லை. அவன் சுற்றியிருந்த பல கிராமங்களுக்குச் சென்று, தொண்டர் படைகளைத் திரட்டிப் பயிற்சி கொடுத்து வந்தான். அதே வேளையில் நாடு முழுவதிலும் தொண்டர்படைகள் மிகத் திறம்படப் பயிற்சி பெற்றுவந்தனர். 1916ஆம் வருடத்திலிருந்த நிலைமையைப் பார்க்கிலும் அப்பொழுது ஐரிஷ் தொண்டர்படை மிகவும் உயர்ந்துவிட்டது. ஆனால் இடையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்களுடைய பரம்பரை வழக்கப்படி கைதிகளுக்குக் கொடுத்த

41