பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டனர். அப்பொழுது டண்டாக் சிறைக்கு மாற்றப்பட்டிருந்த ஸினும் அவன் தோழர்களும் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். அவர்கள் பின்னால் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வளவு காலமாகத் தொண்டர்படையின் பயிற்சி ரகசியமாகவே நடந்து வந்தது. திடீர்ரென்று பிரிட்டிஷ் படைகள் கிராமங்களுக்குச்சென்று சில தொண்டர்களைப் பிடித்துக் கொண்டு சென்றன. ஆனால் ஸீன் விடுதலையாகி வெளி வந்த பின்பு தொண்டர் பயிற்சி வெளிப்படையாகவே நடக்க வேண்டுமென்றும் ஒவ்வொரு தொண்டர்ரையும் அரசாங்கம் கைது செய்து விட்டாலும் கவலைப்படக்கூடாது என்றும் கூறினான். ஏனென்றால் அரசாங்கம் தொண்டர்களை ஒழுங்காகக் கைது செய்ய ஆரம்பித்தால் பல்லாயிரக்கணக்காக முன்வரும் தொண்டர்களை வைப்பதற்கு அயர்லாந்திலுள்ள சிறைகளும் போதாது. பின் உலகமெல்லாம் இங்கிலாந்தைக் கண்டு எள்ளிநகையாடும். எனவே இங்கிலாந்தும் சும்மாகிடந்த சங்கை ஊதிக்கெடுக்க விரும்பவில்லை.

ஐரிஷ் தொண்டர்களுக்கு ஆயுதம் இல்லாமையே பெருங்குறையாக இருந்தது. 1916ஆம் வருவும் நடந்த கலகத்தில் இருந்து அரசாங்கம் முன்னால் இருந்ததைப் பார்க்கிலும் அதிக கண்டிப்பாக ஆயுதச்சட்டத்தை அமுல் நடத்தியது. தேசத்தில் யாரும் அரசாங்க உத்தரவில்லாமல் துப்பாக்கி வைத்திருக்கக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. அடுத்த கலகம் வெகுவிரைவில் வந்துவிடும் என்பதை அரசாங்கம் மோப்பம்பிடித்து அறிந்து கொண்டிருந்தது. ஆனால் யாருக்கும் புலப்படாத சில மாய வழிகளின் மூலம் தொண்டர்கள் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வரவழைத்துக் கொண்டிருந்தார்கள்

அரசாங்கத்தார் அடக்குமுறை ஆவேசத்தில் ஸின் டிரிஸை மீண்டும் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்டது முதலே அவன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டான். சிறையில் வேறு பல நண்பர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் மைக்கேல் பிரென்னன், ஸீமாஸ், ஓநீல். ஸீன் சிறைப்பட்ட காலத்தில் தான்பிரீன் தொண்டர் படையில் படிப்படியாக உயர்ந்த ஸ்தானங்களைப் பெற்று கடைசியில் 'பிரிகேட் கமான்டன்ட்' என்ற படைத் தளகர்த்தர் பதவியையும் பெற்றான். தொண்டர் படையில் ஒவ்வொர் அங்கத்தினரும் வாக்குரிமை பெற்றுத்தத்தம் பிரிவுகளுக்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது வழக்கம். படையிலும் குடியரசுக் கொள்கையையே அவர்கள் கையாண்டு வந்தனர்.

அக் காலத்தில் ஐரோப்பிய யுத்தத்தில் ஆங்கிலேயர் மிகுந்த கஷ்ட நஷ்டங்களை அடைந்து வந்தனர். 1918 - ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஜெர்மானியர் பிரிட்டிஷ் படைக்குள் புகுந்து அவற்றைச்சின்னா பின்னப்படுத்தினார். இங்கிலாந்து மிகவும் அவலமடைந்து மூச்சுத்தினறும் அவ்வேளையிலே, ஆங்கிலே

42