பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3
முதல் வெடிமருந்துச்சாலை


கட்டாய ராணுவச்சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதால் அயர்லாந்தின் ஜனங்கள் மிகுந்த கலக்கடைந்தார்கள். பல்லாயிரக்கணக்கான வாலிபர்களும் வயோதிகர்களும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக ஐரிஷ் தொண்டர் படையில் வந்து சேர்ந்துகொண்டனர். பதினோறிலிருந்து ஐம்பது வயது வரையுள்ளவர்கள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஏதாவதொரு தொண்டர்படையைச் சேர்ந்திருந்தார்கள். பெண்கள் தனியாக ஒரு சங்கத்தை வைத்துக் கொண்டார்கள். பையன்கள் வானரசேனைகளை அமைத்துக்கொண்டு தொண்டர் படைக்கு உதவி செய்ய முன்வந்தனர். வந்த தொண்டர் படையின் முக்கிய அதிகாரிகளிற் பலர் சிறையில் இருந்ததால் வெளியிலிருந்த சிலர் இரவு பகலாக உழைத்து அவர்களுடைய வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருந்தது. கட்டாய ராணுவச்சட்டம் அயர்லாந்தை ஒற்றுமைப்படுத்துவதற்காகக் கடவுள் அருளிய ஒரு பாக்கியம் என்று கருதினார்கள். அதன் மூலமாவது வேற்றுமைகள் ஒழிந்து அயர்லாந்து நிரந்தரமான ஒற்றுமையை அடையுமென்று தான்பிரீன் முதலானவர்கள் எண்ணினார்கள்.

இங்கிலாந்து ஐரிஷ் மக்களின் உறுதியைக் கவனித்து வந்தது. கட்டாய ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவருவதா அல்லது அயர்லாந்தை இழப்பதா என்ற பிரச்சினை ஏற்பட்டது. ஏனெனில் மக்கள் எல்லோரும் கலகத்துக்குத் தயாராக நின்றார்கள். இங்கிலாந்து பேசாதிருந்து நாட்டின் நிலைமையை

45