பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


ஆராய்ந்து வந்தது. தொண்டர்களும் தீவிரமாகவும் இடைவிடாமலும் தங்களுடைய பிரசாரத்தை நடத்தி வந்தார்கள்.

தன்பிரீன் இயற்கையான யுத்தம் வருவதற்கு முன்னே தன்படையினருக்குள்ளே ஒத்திகை யுத்தங்களுக்கு ஏற்பாடு செய்தான். அவர்களில் சிலர் திப்பெரரி நகரின் ஒரு பாகத்தைப் பாதுகாப்பார்கள். மற்றும் சிலர் அதை முற்றுகையிட்டுப்பிடிப்பார்கள். இருகட்சியாருக்கும் தீவிரமான போராட்டம் ஏற்படும். அதிலிருந்து அவர்கள் நல்ல பயிற்சி பெற்றுவந்தார்கள் தொண்டர்கள் திப்பெரரி நகரின் சில பாகங்களைத் தங்களுடைய ராணுவ ஸ்தலங்கள் என்று குறிப்பிட்டு அங்கே ஆங்கிலப் போலீஸாரும் சிப்பாய்களும் வராமல் பாதுகாத்து வந்தனர். அவர்களுடைய இந்த நடவடிக்கைகளின் போதெல்லாம் அந்நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ்கிப்பாய்கள் இருந்தனர் என்பதை மத்துவிடக்கூடாது.

சில சமயங்களில் இங்கிலாந்து புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது வழக்கம். அது தன் கைக்கு எட்டாவிட்டால் குடுமியை விட்டுவிடும். கட்டாய ராணுவச்சட்த்தால் அயர்லாந்திலிருந்து ஒரு மனிதனைக்கூட ராணுவத்திற்குச்சேர்க்க முடியாது என்பதை அது தெரிந்துகொண்டது. ஆதலால் அச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்படாமலே ஒழிந்தது. இதனால் ஐரிஷ் தொண்டர்படைக்கு மிகவும் கஷ்டமேற்பட்டது. பல்லாயிரக்கணக்காக அதில் வந்து சேர்ந்து கொண்டிருந்த மக்கள் படிப்படியாக அதிலிருந்து விலகிவிட்டார்கள். சட்டம் ஒழிந்தவுடன் அவர்களுடைய கவலையும் ஒழிந்து விட்டது. அவர்கள் ஆங்கில அரசாங்கத்தின் கட்டாயத்தினால் ஆங்கிலப்படையில் சேர்ந்து பிரான்ஸ், டாடல்னலிஸ் முதலான யுத்த அரங்கங்களிலே சாவதை வெறுத்து அதற்குப் பதிலாகத் தங்களுடைய நாட்டிலே ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து மடிய விரும்பினார்கள் சட்டம் ஒழிந்த பிறகு அவர்களுக்குத் தொண்டர் படையில் விருப்பமில்லாமல் போய்விட்டது. அவர்கள் அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக ஆயுத்ந் தாங்கிப் போராடத் தயாராகவிருக்கவில்லை. சுதந்திரத்திற்காக ஒரு சொட்டு ரத்தம் சிந்துவதுகூட அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பழைய அரசியல்தலை வாகளும் இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார்கள். ஆனால் வாலிபர்கள் பலர் தங்கள் உறுதியில் சிறிதும் தளராது அயர்லாந்து பூரண சுதந்திரத்தைப் பெறும்வரையிலும் போராடியே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். தான்பிரீனும் அதே கருத்தை கொண்டிருந்தான்.

அச்சமயத்தில் ஸீன்டிரீஸிடண்டாக் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவந்தான். பதின்மூன்று நாட்களாக அவன் உணவுகொள்ளவில்லை. அதிகாரிகள் அவனைச்சாகவிட்டு விடுவார்கள் என்று தோன்றிற்று. வெளியே இருந்த தான்பிரீன் முதலானவர்கள் அச்சமயத்தில் தீரமான ஒரு காரியத்தைச் செய்து அவனை மடியவிடாமல் பாதுகாக்க வேண்டுமென்று கருதினார்கள். தான்பிரீனுக்கு ஒரு

46