பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


யோசனை தோன்றியது. ஸீனை அரசாங்கத்தார் சிறைவூத்திருப்பதைப் போல தானும் அவர்களுடைய போலீஸ்காரன் ஒருவனைப் பிடித்துக்கொண்டு வந்து ஒரு ரகசியமான வீட்டில் அடைத்துவைத்து, அவனை பலவந்தமாக உண்ணாவிரதம் இருக்கும்படி செய்யவேண்டும் என்றும், ஸீனை விடுதலை செய்தால்தான் போலிஸ்காரனையும் விடுதலை செய்ய முடியும் என்றுறு அறிவித்து விடவேண்டும் என்றும் அவன் தீர்மானம் செய்தான் மறற நணபாகளும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அக்காலத்தில்லிமெரிக் ஜங்ஷன் என்னுமிடத்தில் இருப்புப் பாதை பக்கம் சில போலீஸ்காரர் காவலுக்கு நிற்பது வழக்கம். தான்பீரீனும் அவனுடைய தோழர்களும் மொத்தம் 40 பேர்கள் ஒரு நாள் அவ்விடதிற்குச் சென்று அருகே இருந்த மலையடிவாரத்தில் மறைந்திருந்தார். தற்செயலாக அன்றைக்கு ஒரு போலிஸ்காரனும் அவ்விடத்திற்கு வரவில்லை. பின்னால் தான்பிரீனுடைய யோசனை ஐரிஷ் குடியரசுச் சகோதர சங்கத்தால் நிராகரிக்கபட்டது. அச்சங்கம் மிகவும் ரகசியமானது. மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமான தொண்டர்கள் பலர் அதில் இருந்தனர். தொண்டர் படையை மேற்பார்க்கும் அதிகாரம் அச்சங்கத்துக்கே உண்டு. இச்சம்பவத்திற்குப் பிறகு தான்பிரீத் சங்கத்திலிருந்து விலகி விட்டான்.

1918 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஸீன் விடுதலை செய்யபட்டான் அவன் வெளியே வந்தவுடன் தொண்டர் படைசம்பந்தமான திட்டங்கள் பற்றி தான்பிரீனிடம் விவாதித்தான். தான்பிரீன் திட்டங்கள் போட்டுப் போட்டு சலிப்படைந்து இருந்ததால் உடனே சண்டையை ஆரம்பிக்க வேண்டுமென்று கூறினான். ஸீனுக்கும் அவனுக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டது. இருவரும் தாங்கள் நட்புக்கு எவ்விதக் குறைவும ஏறபடாதபடி தத்தம் கருத்துப்படியே வேலைசெய்ய ஆரம்பித்தார்ர்கள். தான்பிரீன். பாட்ரிக் என்னும் நண்பனுடன் சேர்ந்து ஒரு வெடிமருந்துச் சாலையை ஏற்படுத்தினான். அதன்மூலம் ஏராளமான வெடி மருந்தைத் தயார் செய்யவேண்டும் என்பது அவன் நோக்கம். தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் அவனும் கியோக்குமே. அத்தொழிற்சாலை டாம் ஒட்வியர் என்பவருடைய குடிசையின் ஒரு பாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. தான்பிரீனிடம் வெடிமருந்து செய்வதற்குத் தக்க யந்திரங்கள் இல்லை. கையாலேயே வெடிமருந்தும் குண்டுகளும் தயார் செய்யவேண்டி இருந்தது. செய்யபட்ட குண்டுகளும் மழையிலும் காற்றிலும் வெளியே கொண்டுபோனால் வெடிக்கக்கூடியனவாக இல்லை. வெடிகுண்டுகள் தயார் செய்வதோடு அவர்கள் தோட்டக்களும் தயார் செய்து வந்தார்கள். அவர்கள் வெளியிடங்களில் இருந்து துப்பாக்கிகளையும் ரிவால்வர்களையும் அபகரித்து வருவதையும் நிறுத்திவிடவில்லை. ஆங்காங்கே சிலரிடம் இன்னும் துப்பாக்கிகள் பாக்கி இருந்தன. தான்பிரீன் அவர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்வது வழக்கம்.

47