பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


அடிமை நாட்டில் அந்நியர் வலியராகி நிற்கும் பொழுது மக்கள் இத்தைகயை கெரில்லாச்சண்டையே செய்யமுடியும். பல கெரில்லாச்சண்டைக்கு ஆட்களின் தொகையைப் பார்க்கிலும் அவர்களின் தீரமும் திறமையுமே முக்கியம். தான்பிரீன் இதையறிந்து தன்னிடமிருந்த நண்பர்கள் சிலரைத் தயார் செய்து வைத்துக்கொண்டான்.

வெடிமருந்துடன் வரும் போலிஸாரைச் சுடுவதா அல்லது ஆயுதங்களை மட்டும் பறித்துக் கொண்டு அவர்களை விட்டு விடுவதா என்று பிரச்சினையைப்பற்றி அவன் நண்பர்களுடன் யோசனை செய்தான். ஸீன் அநாவசியமாய் அவர்களைக் கொல்ல வேண்டாம் என்றும் ஆயுதங்களே தங்களுக்குக் குறி என்றும் எடுத்துக் கூறினார்.

ஸோலோஹெட்பக் திப்பெரரியிலிருந்து இரண்டரை மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய நகரம். லிமெரிக் ஜங்ஷனுக்கும் அதற்கும் இடையில் உள்ள தூரம் ஒரு மைல். கல்லுடைக்கும் இடம் ஒரு கிளை வீதியின் மேல் இருந்தது. அங்கு ஏராளமான பாறைகள் உண்டு. அந்தப் பகுதி மலைப்பாங்கான பிரதேசம். வெகுசமீபத்தில் ஊர்களில்லை. நிலங்களின் மத்தியில் சில வீடுகள் மட்டும் கட்டப்பட்டிருந்தன. கல்லுடைக்கும் இடம் கிளை வீதியின் வலது பக்கத்திலிருந்தது. அதன் இரண்டு பக்கத்திலும் உயர்ந்த மரக்கிளைகள் இருந்தன. அவற்றிற்குப் பின்னால் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. ஒளிந்திருப்பதற்கு அவை மிகவும் உதவியாயிருந்தன.

தான்பிரீன் கூட்டத்தாருக்கு வெடிமருந்து வண்டி வரும் நிச்சயமான தேதி தெரியவில்லை. வரப்போகின்ற நாளைக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே அது வருவதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அந்த ஐந்து தினங்களிலும் அவர்கள் புதர்களில் மறைந்து காத்திருந்து ஏமாந்தனர்.

வெடிமருந்துக்காகக் கடைசிவரை காத்து நின்றவர்கள் பின் கண்ட ஒன்பது பேர்கள் தான்பிரீன், ஸீன் டிரீஸி, ஸீமஸ் ராபின்ஸன், ஸீன்ஹோகன், ஜாக் ஒமீரா, பாட்ரிக் மக்கார் மிக், மைக்கேல் ரியான், பாட்ரிக் ஒட்வியர், டிம்குரோ.

எவரும் அறியாதபடி அவர்கள் மறைந்திருக்க வேண்டியிருந்தது. காலம் மிகக் குழப்பமானது. கண்டவர்களையெல்லாம் போலிஸார் சந்தேகிப்பது வழக்கம். கல்லுடைக்கும் இடத்தில் வேலைசெய்துவந்த நூற்றுக்கணக்கான தொழிலாளரில் யாரேனும் அந்நியர்கள் அக்கம்பக்கத்தில் நடமாடுவதைக் கண்

57