பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"நாமும் ஆங்கிலேயரும் பக்கத்து வீட்டுக்காரர். ஆயினும் அவர்கள் நம் வீட்டில் குடிபுக ஒரு நாளும் சம்மதிக்கமாட்டோம்.“ "நமக்கு வழி, நம் பாஷை, அதுவே நம் குணமாக அமைகிறது. உண்மையான ஐரிஷ்காரன் யர் ஆங்கிலேயரால் கலகக்காரன் என்று அழைக்கப்படுகின்றவனே.“

அயர்லாந்து விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த சிலரைப்பற்றி தமிழில் எழுத வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. 1932ம் ஆண்டு முதல் இரண்டு வருடம் திருச்சியில் மூன்றாவது வகுப்புக் கைதிகளாக என்னோடு நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இருந்து வந்தனர். அவர்களில் ஆங்கிலப் படிப்பு இல்லாதவரே பெரும்பாலோர் அவர்களுக்கு நான் தமிழில் எழுதிய நூல்கள் அயர்லாந்தைப் பற்றியவை மூன்று: மைக்கேல் காலின்ஸ் சரித்திரம், டெரன் மாக்ஸ்வினியின் சுதந்திரத்தின் தத்துவங்கள், தான்பிரீன் சரித்திரம்.

இந்த மூன்றில் முந்தியவை இரண்டும் முன்பே வெளிவந்து விட்டன. 1947 வரை நம்நாடு அடிமைப்பட்டிருந்ததால் தான்பிரீன் சரித்திரத்தை வெளியிட இயலவில்லை. ஏனெனில் இதற்கு ஆதாரமான மூலநூல் இந்திய நாட்டில் வழங்கக் கூடாதென்று கடற் சங்கம் தடை செய்திருந்தது.

- ப. ராமஸ்வாமி