உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6
பதினாயிரம் பவுண்டு பரிசு


நாட்டுப்புறத்திலே, வீதி நடுவிலே, குண்டோசை கேட்டது. வயல்களிலும் பண்ணைகளிலும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டுப் போயினர். ஆங்காங்கே சிதறிக்கிடந்த வீடுகளின் வாயில்களில் ஆண்களும் பெண்களும் மொய்த்து நின்று, என்ன விசேஷம் என்று கவனித்தனர். மாண்டுகிடந்த போலிஸாரைப் பார்த்து வழிப்போக்கர்கள் பிரமித்து நின்றனர். வண்டிக்காரன் ஜேம்ஸ் காட்பிரேயும், முனிசிப்பல் வேலைக்காரன் பாட்ரிக் பிளினும் சாலை ஓரத்திலே மெய்மறந்து கிடந்தனர். ஒரு மணி நேரத்தில் அதிகாரிக்குத் தகவல் தெரிந்தவுடன் பல்லாயிரம் பட்டாளத்தார் அங்கு வந்து விடுவார்கள். சந்துகள், பொந்துகள், வீதிகள் எல்லாம் ராணுவ வீரர்கள் மொய்த்து விடுவார்கள்.

தான்பிரீன் ஒரு வினாடியேனும் வீண்போகக்கூடாதென்று அறிந்து போலிஸார் கையிலிருந்த ஆயுதங்களையும் தோட்டாக்களையும் பறித்துக்கொண்டு, இரண்டு பேரைத் தவிர மற்றத் தோழர்களை எல்லாம்பல திசைகளிலும் பறந்தோடும்படி உத்தரவிட்டான். அவனுடன் இருந்த நண்பர்கள் ஸீன் டிரீஸியும், ஸீன் ஹோகனும் வெடிமருந்து வண்டியின் பின்பக்கத்தில் தான்பிரீனும், டிரீஸியும் அமர்ந்து கொண்டனர். ஹோகன் சாரத்தியம் (சாரத்தியம் : வண்டி ஓட்டுதல்) செய்ய ஆரம்பித்தான். ஏனெனில் வண்டியில் இருந்தவர்களுடைய உயிர்கள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஹோகன் லகானை இழுத்தவண்ணமாகவே இருந்தான். வழியிலே வண்டியிலுள்ளவர்களைக் கண்டு பள்

60