தான்பிரீன் : தொடரும் பயணம்
ளிக்கூடப் பிள்ளைகளும் குடியானவர்களும் ஆச்சரியப்பட்டுக்கொண்டே சென்றனர். வண்டி இடையில் நிற்கவில்லை.
டோனாஸ்கி என்னுமிடத்தை நோக்கி வண்டி சென்றது. வழியில் வெகுநேரம் வரை தொண்டர்களில் ஒருவரும் வாய் திறக்கவில்லை, கரடுமுரடான மலைப்பாங்கான வீதியில் வண்டி கற்களில் தூக்கிப்போடும்பொழுது குடல் தெறித்துவிடும்போலிருந்தது. ஆனால் வெடிமருந்து மட்டும் எப்படியோ வெடிக்காமலிருந்தது. வண்டியிலுள்ளோர் தாங்கள் தேடிக் கொணர்ந்த பண்டமே தங்களைத் தீர்த்துவிடுமோ என்று பயந்து கொண்டே சென்றனர்.
கடைசியாக அவர்கள், முன்னரே ஏற்பாடு செய்திருந்த இடத்தை அடைந்தனர். அங்கே தயாராக வைக்கப்பட்டிருந்த குழியில் வெடிமருந்தைக் கொட்டி மூடிவைத்தனர். தான்பிரீன் இரண்டு வெடிமருந்துக்குச்சுகளை மட்டும், போலிஸார் கண்ணில் மண்ணள்ளிப்போடுவதற்காகக் கையில் வைத்துக்கொண்டான். குதிரையை அவிழ்த்து ஓட்டிவிட்டு அந்த இடத்தில் அவற்றைப்போட்டு வைத்தான். பின்னால் போலிஸாரும், ராணுவத்தாரும் அப்பக்கத்தில் மாதக்கனக்காய் தேடும் பொழுது, வெடிமருந்து புதைக்கப்பட்ட இடத்தின் மேலே பல தடவை நடந்துவந்த போதிலும் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் வெகுதூரத்திற்கு அப்பால் கிடந்த இரண்டு குச்சிகளையும் சுற்றிச்சுற்றிப் பல நூறு சுரங்கங்களைத் தோண்டிவிட்டார்கள். வெடிமருந்து பூமிக்குள் இருப்பதாகக் கருதி அதை எடுப்பதற்காக அவர்கள் வெட்டிய குழிகளை, ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் பாசறைகளாக உபயோகிக்கலாம். அவ்வளவு சிரமப்பட்டு, அவர்கள் நாட்டுப்புறம் எங்கும் குழிதோண்டி விட்டனர். ஆனால் மருந்துள்ள இடம் மட்டும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை. வெளியே போடப்பட்டிருந்த இரண்டு குச்சிகளும் அவர்களை முற்றிலும் ஏமாற்றி விட்டன.
தொண்டர்கள் தென்பக்கத்தில் கால்டீ மலைகளை நோக்கி நடந்து சென்றனர். அம்மலைகளில் பிறர் அறியாமல் மறைந்திருக்க முடியும். நான்கு மைல்களுக்கு அப்பால் அவர்கள் பிட்ஸ்ஜெரால்டு என்ற ஒருத்தி வீட்டில் சிறிது நேரம் தங்கி உணவெடுத்துக்கொண்டனர். காலையில் வீட்டில் சாப்பிட்ட பிறகு அதுதான் அவர்களுடைய இரண்டாம் வேளை உணவு அங்கு அதிக நேரம் தங்காது மீண்டும் வழிநடக்கத் தொடங்கினர். குளிர்தாங்கமுடியாமல் இருந்தது. வழியில் இரண்டு மலை ஆடுகள் நின்றதைத் தவிர வேறு உயிர்ப்பிராணிகள் எதுவும் அப்பக்கத்திலே காணப்படவில்லை. அவர்களுக்கு மலைப் பாதைகள் சரியாகப் புலனாகவில்லை. வழியிலே இருந்த இரண்டொரு வீட்டாரிடம் பாதையை விசாரிக்கலாம் என்றால் அவர்களுடைய வாய் கம்மா இருக்காது. அப்பக்கத்தில் மூவர் சென்றதாக அவர்கள் யாரிடத்திலேனும் சொல்லிவிடக் கூடும். ஆதலால் மூவரும் யாரையும் கண்டு கேளாமல் கால்கள் போன இட
61