பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


யம் கெட்டுவிடும். அவ்விடத்தை விட்டுத் திரும்பிச் சென்றாலும், சிப்பாய்களுக்கு வேறு சந்தேகம்வேண்டியதில்லை. எனவே தொண்டர்கள் ஒரு பாவமும் அறியாதவர் போல் அமைதியாக இருந்து விட்டனர்.

இருபது லாரிகளைக் கடந்தாயிற்று. பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் அவர்கள் பட்டாளத்தாரை வியப்போடு பார்த்துக்கொண்டே சென்றனர். அவர்களுடைய பார்வை, அளவற்ற கிருபையுடன் எங்களை ஆண்டடக்கும் துரைமார்களே, எவ்வளவு அலங்காரமான உடைகளை அணிந்து செல்கிறீர்கள் என்று பரிகசிப்பது போல் தோன்றிற்று. எல்லா லாரிகளையும் தாண்டியாகி விட்டது. ஒரு சிப்பாய்கூட அவர்களைச்சந்தேகிக்கவில்லை. ஆனால், வீதியில் ஒரு மூலையிலே சென்றவுடன், அங்கு காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்த சிப்பாய் 'நிறுத்தங்கள் காரை' என்று ஒரு போடு போட்டான் கார் உடனே நிறுத் தப்பட்டது!

காருக்குள்ளே இருந்தவர்கள் நெருக்கடி ஏற்பட்டு விட்டதாய்க் கருதினார்கள். மற்ற சிப்பாய்கள் எல்லோரும் வேண்டுமென்றே தங்களை விட்டுவிட்டுப் பின்னால் தாங்கள் ஓடி விடாதபடி சூழ்ந்து கொள்ளவே சூழ்ச்சி செய்திருப்பதாக அவர்கள் எண்ணினார்கள். இருக்கும் நிலைமையில் என்ன செய்வது என்று யோசித்தனர்கள். தான்பிரின் துப்பக்கியை எடுத்து வெளிக்குத் தெரியாமல் மறைவாகப் பிடித்துக் கொண்டான். முதல் குண்டை யார் தலையில் செலுத்த வேண்டும் என்று குறிபார்த்துக் கொண்டான். அவ்வேளையில் ஓர் அதிகாரி அங்கு விரைந்து ஓடிவந்தார்.

'கனவான்களே, உங்களைத் தாமதப்படுத்தியதற்காக மன்னிக்க வேண்டும்' என்று அவர் கூறினார். மன்னிப்பு என்ற சொல்லைக் கேட்டவுடன், தான்பிரீன் திடுக்கிட்டுப் போனான். மறைவாகத்துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டான். அந்த அதிகாரி காவற் சிப்பாய்களின் தலைவர்.வீதியில் இரண்டு லாரிகள் உடைந்து கிடப்பதாயும், அவை குறுக்கே அடைத்துக் கொண்டிருந்ததால் அந்தப் பக்கமாய் கார்செல்ல முடியாதென்றும், எல்லோரும் கீழே இறங்கி நடந்து செல்வது நல்லது என்றும் அவர் கூறினார்.

இதற்குள் தான்பிரீன் மனம் அமைதி பெற்று விட்டது. அவன் மரியாதையாக அதிகாரியைப் பார்த்து, ஐயா! மிக முக்கியமான வேலையின் நிமித்தம் நாங்கள் அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. நீண்ட தூரம் காரில் வந்ததால் களைப்படைந்திருக்கிறோம். அத்துடன் என் காலில் வாதநோய். நான் எப்படி நடக்கமுடியும்? நீரே யோசித்துச் சொல்லும் என்று கூறினான். அதிகாரி இாக்கமைந்து நாலைந்து சிப்பாய்களை அழைத்து, துப்பாக்கிகளைக் கீழே வைத்துவிட்டுத் தான்பிரீனுடைய காரைத் தள்ளிக் கொண்டு போய் மறுபக்கத்

59