பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


லிமெரிக்கிலிருந்து தான்பிரீனும் ஹோகனு, லாகெல்லிக்குச் சென்றனர். அங்கே வந்திருந்த டிரீஸியையும் ராபின்ஸனையும் சந்தித்தார்கள். அவர்கள் சந்தித்த காட்சி பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் போட்டிப் பந்தய விளையாட்டில் ஆனந்தக்கூத்தாடுவது போல் இருந்தது. நால்வரும், ஒன்று கூடிவிட்டதால் அவர்களுடைய கவலைகள் சிதறிப் போயின. தான்பீரின், பாதிரியார் தங்களுக்குச் செய்த உதவிகளையும், நண்பர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தான். டிரீஸியும், ராபின்ஸனும் டப்ளின் நகரில் தங்களை யாரும் சந்தேகிக்கவில்லை என்பதையும் வேறுபல அதிசயங்களைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.

லாகெல்லி, ஸோலோஹெட்பக்கிலிருந்து ஆறு அல்லது ஏழுமைல் துரத்திலுள்ளது. அவ்விடத்திற்குத் தான்பிரீன் வந்து சேர்ந்தது வரை ஸோலோஹெட்பக் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. பட்டாளத்தாரும், போலிஸாரும் அந்தப் பக்கங்களில் வெடிமருந்துப் புதையலைத் தேடிக் குழிகள் தோண்டுவதை நிறுத்தியபாடில்லை. தான்பிரீஸ், எங்கெங்கு போவது வழக்கம் என்று அறிந்து, அங்கெல்லாம் சோதனை போடப்பட்டது.

தான்பிரீனும் தோழர் மூவரும் நான்கு சைக்கில்களை வாங்கிக்கொண்டு, டப்ளினுக்குச் செல்லும் நோக்கத்துடன், டோனோஹில்லுக்குச் சென்றனர். வழியில் முன்னால் போலிஸாரைச் சுட்ட இடத்தைத் தாண்டிச்செல்ல வேண்டியிருந்தது. அவ்விடத்தில் அவர்கள் கீழிறங்கிச் சில நிமிஷங்கள் தங்கி விட்டுச் சென்றனர். டோனோஹில்லிருந்து தான்பிரீனுடைய வீடு அரை மையில் தூரத்தி இருந்தது. அவன் மூன்று மாத காலமாய்ப் பாராத தன் அன்னையைப் பார்க்கவேண்டும் என்று ஆவல் கொண்டான். இடையில் அவளுக்கு ஒரு கடிதங் கூட எழுதவில்லை. ஆதலால் அவன் நேராக வீட்டை நோக்கிச் சென்றான். அன்னையின் திருவடிகளைப் பணிந்தான். அந்த மாதரசியின் துயரங்களுக்கு அளவில்லை. தான்பிரீன் போன்ற பிள்ளையைப் பெற்று வீரத்தையும் தேசாபிமானத்தையும புகடடிய ஒரு குற்றத்தினால் அவள்பட்ட கஷ்ங்களை வேறு யாரால் சகிக்கமுடியும்? அவளுடைய சிறு வீடு 24 மணி நேரத்தில் மூன்று முறை சோதனை போடப்பட்டு வந்தது. அதிகாலையில் விடிவதற்கு முன்னால் 'பீலர்கள்' வந்து சோதனை போடுவார்கள்; நள்ளிரவில் பட்டளாத்தார் திடீரென்று புகுந்து சோதனை போடுவார்கள். அந்தத் தாய் அவ்வளவையும் சகித்துக் கொள்வாள். பிற்காலத்தில் 'பிளாக் அண்டு டான்' என்ற பட்டாளத்தார் அயர்லாந்தில் சொல்ல முடியாத கொடுமைகளைச் செய்துவந்த காலத்தில், அவளுடைய வீட்டைத் தீவைத்துப் பொசுக்கி, அவளுடை, கோழிகளையும் குஞ்சுகளையும் கூடக் கத்தியால் குத்திக் கொன்றார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோபம் கோழிக் குஞ்சுகளின் தலையிலும் பாய்ந்தது!

72