பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


களைத் தேடி அலைந்து கொண்டிருக்க, அவர்கள் இங்கே ‘டான்ஸ்' ஆடிக் கொண்டிருந்தார்கள்

இரவு முழுவதும் நடனஞ் செய்துவிட்டு விடியப் போகிற நேரத்தில், தான்பிரீன் சில பையன்களுடன் ரோஸ்மூருக்குத் திரும்பினான். மற்ற மூவரும் அவனுடன் செல்லாது அங்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். தான்பிரீன் இருப்பிடத்திற்குச் சென்றபின், சிறிது நேரத்தில் டிரீஸியும், ராபின்சனும் அங்கு வந்து சேர்ந்தனர். ஸீன் ஹோகன் மட்டும் வரவில்லை. அவன் பின்னால் வந்து சேருவான் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் படுக்கச் சென்றனர்.

ஐந்து தினங்களாக உறக்கமில்லாதிருந்ததாலும், அன்றிரவு முழுவதும் நடனமாடியதாலும் மூவரும் மிகவும் களைப்புற்றுப் படுத்தவுடனே உறங்கி விட்டனர். தொழுவங்களிலும் தோட்டங்களிலும் அவர்கள் நன்றகத்தூங்குவார்கள். படுக்கைகளும் தலையணைகளும் அலங்காரமாகப் போடப்பட்ட இடத்தில் நித்திரைக்குக் குறைவிருக்குமோ!

தான்பிரீன் உறங்கும் பொழுது யாரோ ஏதோ கூறுவது செவியில் பட்டது. தூக்கத்தில் ஒன்று சரியாக புலனாகவில்லை. பாட்ரிக்கின்னான் என்னும் பழைய நண்பர் திடீரென்று அங்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். தான்பிரீன் கண்னைவிழிக்க முடியாமல் அயர்ந்து கிடந்தான். ஆனால், கின்னான், 'பீலர்கள் ஹோகனைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள், என்று தெளிவாகக் கூறிய சொற்களைக் கேட்டவுடன், அவன் திடுக்கிட்டு எழுந்துவிட்டான். அவ்விஷயத்தை அவனால் நம்ப முடியவில்லை. ஹோகன் பீலர்களால் சுடப்பட்டு இறந்தான் என்றால், அதை நம்பியிருப்பான். ஆனால், எதிரிகளைச் சுட்டுத் தள்ளாமல், பேடித்தனமாக அவன் பீலர்களுடைய கையில் சிக்கினான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. கின்னான் வேடிக்கையாக் கூறியிருப்பாரோ என்று சந்தேகித்து அவன் டிரீஸியைத் திரும்பிப் பார்த்தான். ஒரு வினாடியில் மூவரும் எழுந்து நின்று அடுத்தாற் போல் என்ன செய்வதென்று யோசிக்கலாயினர்.

தான்பிரீனுடைய தலை கிறுகிறுத்துக் கொண்டிருந்தது. உடம்வு முழுவதும் உணர்ச்சியற்றிருந்தது. ஆயினும் ஆருயிர்த்தோழன் ஹோகன் பகைவர் கையில் சிக்கிவிட்டான் என்றதைக் கேட்டு அவன் நிலை கொள்ளவில்லை. அவனும் தோழர்களும் ஹோகனைப் பீலர்களுடைய கையிலிருந்து உடனே விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர். 'ஹோகனை விடுவிக்க வேண்டும், அல்லது நாம் மடிய வேண்டும்' என்று முடிவு செய்தனர்.

ஹோகன் எப்படிப் பிடிப்பட்டான் என்பதைப் பற்றி அவர்கள் விசாரித்தார்கள். அவன் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். இடையில் பத்து பீலர்கள் அவனைச் சூழ்ந்து பிடித்துக் கொண்டனர். அவன்

75