பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


துப்பாக்கியைத் தொடுவதற்குக் கூடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் பீலர்கள் புரட்சிக்காரர்களைப் பிடிப்பதானால், பிடித்தவுடன் சுட்டுக் கொல்வது வழக்கமாயிற்று. ’கைதிகள் ஓட ஆரம்பித்தார்கள். அதனால் சுட்டு விட்டோம்!' என்று அவர்கள் மழுப்பிவிடுவார்கள். ஆனால் அந்த வழக்கம் ஹோகன் பிடிபடும்போது அமுலில் இல்லை.

ஹோகன் எங்கே வைக்கப்பட்டிருக்கிறான் என்ற தகவலொன்றும் கிடைக்கவில்லை. வழிப்போக்கர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றால் அக்காலத்தில் நன்றாய் விடிவதற்குமுன்னால் எவரும் வீதியில் நடமாடுவதில்லை. அவனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துவரச் சில வாலிப நண்பர்கள் சைக்கிள்களில் சுற்றித் திரிந்தனர். ஒரு புலனுந் தெரியவில்லை. பீலர்கள் ஹோகனை மிகவும் எச்சரிக்கையாய் மறைத்துக் கொண்டு போயிருந்தனர். வெகு நேரத்திற்குப் பிறகு, அவன் தர்லஸ் போலிஸ் நிலையத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

தர்லஸ் போலிஸ் நிலையத்தைத் தாக்கி அதிலிருந்து ஹோகனை மீட்பது நடக்க முடியாத காரியம். ஏனெனில் ஏராளமான போலிசும் பட்டாளமும் எந்த நேரத்திலும் தயாராய் வைக்கப்பட்டிருந்தன. போலிஸ் நிலையத்தைச் சுற்றிலும் பெரிய கோட்டை ஒன்று இருந்தது. போலிஸார் இமைகொட்டாது பாராக் கொடுத்து வந்தனர். புரட்சிக்காரருடைய வேலைகள் அவர்களுக்கு மிக நன்றாய்த் தெரியும். அதிலும் வெடிமருந்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஹோகன் அவர்களிடம் கைதியாக இருக்கும் பொழுது அவர்கள் அதிக எச்சரிக்கையாயிருந்தது ஆச்சரியமில்லை.

போலிஸ் நிலையத்தைத் தாக்க முடியாவிட்டால் வேறு என்ன செய்வது, இதைப் பற்றித் தான்பிரீன் தீவிரமாக யோசித்து, ஒரு முடிவு செய்தான். அக்காலத்தில் கைதிகளை ‘ரிமாண்டு' செய்வதற்கும் ஆரம்ப விசாரனை செய்வதற்கும் இரண்டொரு நாள்தான் போலிஸ் நிலையத்தில் வைப்பது வழக்கம். பிறகு அவர்கள் மவுன்ட் ஜாய், கார்க், மேரிபரோ, டான்டாக், பெல்டாஸ்டு முதலிய பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றுக்கு மாற்றப்படுவது வழக்கம். திப்பெரரிக் கைதிகளை கார்க் நகர ஜெயிலுக்குக் கொண்டு போவார்கள். எனவே ஹோகன், தர்லஸ் நிலையத்திலிருந்து ரயிலில் கார்க்குக்கே கொண்டு போகப்படுவான் என்று தான்பிரீன் ஊகித்தான்.

அதற்குத் தக்கபடி திட்டம் அமைத்தான். எமிலி என்ற ஸ்டேஷனுக்குப் போய், அங்கு ரயில் வந்தவுடன் உள்ளே பாராக்காரர்களைச் சுட்டுவிட்டு, ஹோகனை மீட்க வேண்டும் என்பது அவன் யோசனை. எமிலி சிறிய ஸ்டேஷன். அங்கு பட்டாளம் கிடையாது. ஆனால் ரயிலை நிறுத்திக் கைதியை மீட்பது

76