பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


வினாடிகளுக்குள் அவர்கள் அதில் ஏறி நீண்ட பாதையின் வழியாக ஹோகனிருந்த அறைக்குள் பாய்ந்தனர். பாயும்பொழுது அவர்கள் 'தூக்குங்கள் கைகளை' என்று கூவிக்கொண்டே சென்றனர். அவர்கள் உள்ளே போவதற்கு ஒரு நிமிஷத்திற்கு முன்புதான் சார்ஜெண்டு ஹோகனைப் பார்த்து, 'அடே உன்னுடைய ஸீன் டிரீஸியும், தான்பிரீனும் இப்பொழுது எங்கடா போனார்கள்?' என்று கேட்டுக்கேலி செய்தானாம். அடுத்த நிமிஷத்தில், அவன் விளையாட்டாகக் கேட்ட கேள்விக்கு உண்மையாகவே பதில் கூற, நீட்டிய ரிவோல்வர்களுடன் தான்பிரீனும், டிரீலியும் அங்கு புகுந்து விட்டனர். ஹோகன் அநாதையில்லை என்பதை நிரூபித்து விட்டார்கள்.

போலிசார் புதிய ஆசாமிகளைக் கண்டவுடன் அவர்கள் வந்த காரியத்தைத் தெரிந்து கொண்டனர். என்ரைட் என்ற கான்ஸ்டபிள் தன் ரிவால்வரை எடுத்து ஹோகனுடைய நெற்றிக்கு நேராக நீட்டிவிட்டான் யாராவது கைதியை விடுவிக்க வந்தால் முதலில் கைதியைச் சுட்டுக் கொல்லும்படியாகப் போலிஸ் மேலதிகாரிகள் அவர்களுக்குச் சொல்லிவிட்டிருந்தார்கள். கண்கொட்டு முன்னால் அப்பாதகன் ஹோகனைச் சுட்டிருப்பான். ரிவால்வரின் விசையை இழுக்கும்போழுது, அவனுடைய நெஞ்சில் படீரென்று குண்டு பாய்ந்து விட்டது. அவன் சுருண்டு விழுந்து இறந்து போனான். அந்தக் குண்டு புரட்சிக்காரருடைய முதற் குண்டு.

வண்டியிலிருந்த மற்றப் பிரயாணிகள் புரட்சி வாலிபர்களுடைய நோக்கத் தைத்தெரிந்து கொண்டார்கள். அங்கிருந்த பட்டாளத்தான் ஒருவன் கூட, பிரிட்டிஷ் காக்கி உடையை அணிந்து கொண்டே, 'குடியரசு நீடுழி வாழ்க!' என்று வாழ்த்துக்கூறி ஆர்ப்பரித்தான். அவன் சொந்த வேலையின் பொருட்டு எங்கோ சென்று கொண்டிருந்தவன்.

முதல் குண்டில் ஒரு போலிஸ்காரன் தீர்ந்துபோனதைக் கண்டு மற்றவர்கள் ஹோகன் மேல் கைவைக்க அஞ்சினர். அந்தக் குண்டோசை கேட்டவுடன் மற்றொரு போலிஸ்காரன் ஜன்னல் வழியாகக் குதித்து, ஊளையிட்டுக்கொண்டே மாயமாய் மறைந்து போனான். மறுநாள் காலையில்தான்.அவன் எமிலிபோலிஸ் நிலையத்திற்குப் போய் முதல் நாள் ஸ்டேஷனில் நடந்ததைக் கூறினானாம்!

கான்ஸ்டபிள் என்ரைட் இறந்து போனான்; மற்றொருவன் உயிருடன் மறைந்தொழிந்தான். சார்ஜெண்டு வாலஸ் என்பவனும், கான்ஸ்டபிள் ரெய்லியுந்தான் பாக்கியிருந்தார்கள். அவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சுட ஆரம்பித்தார்கள். புரட்சிக்காரர்களும் சுட்டார்கள். அவர்கள் சுடுவதில் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்களுடைய குண்டுகள் தங்கள் ஆட்களையே கொன்று விடக்கூடும். அல்லது ஹோகன் மேல் பட்டுவிடக்கூடும். இடையில் கான்ஸ்டபிள் ரெய்லி கீழே தரையில் சாய்ந்து விட்டான். இருக்கும் நிலையைக் கருதி, அவன் இறந்தவனைப்

81