பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


போலிஸார் வெகுதூரத்தில் வரும்போழுது யாரோ ஓடிவந்து தகவல் கொடுத்துவிட்டதால், ஹோகன்தப்பி ஓடுவதற்குப் போதுமான நேரம் இருந்தது. அவன் வீட்டிலிருந்தே வெளியில் எட்டிப் பார்த்தான். போலிஸார் தென்படவில்லை. உடனே அவன் வெளியேறி, போலிஸார் வடபக்கத்திலிருந்து வருவதாக எண்ணிக்கொண்டு தென்புறம் திரும்பி வயல்களில் குதித்து ஒடலானான். வீதி மேட்டிலிருந்ததால், அங்கிருந்து பார்த்தால் வயல்களில் நடப்பது நன்றாகத் தெரியும். வீதியில் ஆறு போலிஸ்காரர் நின்று கொண்டு ஹோகன் ஓடிவருவதைக் கவனித்தனர். அவன் அதிவேகமாய் வயல்களைத் தாண்டி அவர்கள் நின்ற இடத்திற்கே போய் மேட்டில் ஏறிவிட்டான் போலிஸ்கார்கள் உடனே அவனைப் பிடித்துக் கொண்டனர். ஹோகன் தனக்கு மேற்கொண்டு அபாய மில்லை என்று கருதியிருந்ததால் ரிவால்வரை இடுப்பில் மாட்டியிருந்தான். ஆதலால் அதை உடனே எடுக்க முடியவில்லை.

உடனே அவனுக்கு விலங்கிடப்பட்டது; அவனுடைய ரிவால்வர் பறிக்கப்பட்டது. போலிஸார் அவனை மீகருடைய வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கே அதற்கு முன்னால் சென்று வீட்டைச் சோதனை போட்டுக் கொண்டிருந்த பல போலிஸார் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அங்கு கூடியிருந்த போலிஸார் அனைவருக்கும் தங்களிடம் கைதியாக அகப்பட்டிருந்த பேர்வழி யார் என்பதே தெரியவில்லை. அவன் பெயர் என்ன என்று கேட்டார்கள். ஹோகன் பீலர்களை மதித்துப் பதில் சொல்வது வழக்கமில்லை. பீலர்கள் அவனை வெளியே கொண்டு செல்லும்போது அவனுடைய தோழி பிரிஜிட் அவ்விடத்திற்கு ஓடிவந்து, 'ஸீன் போய்வா! வந்தனம்! என்று கூறினான். அப்பொழுதுதான் போலிஸாருக்கு அவனுடைய பாதிப் பெயர் தெரிய வந்தது!

அந்தப் போலிஸ் கூட்டத்திற்கு சார்ஜென்டு வாலஸ்தான் தலைமை வகித்திருந்தான். கான்ஸ்டபிள் ரெய்லியும் அவனுடன் இருந்தான். கடையில் போலிஸார் ஹோகனை தர்லஸ் போலிஸ் நிலையத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்ந்தனர். அங்கு ஒரு போலிஸ்காரன் ஹோகனைப் பார்த்தவுடன், அவன் ஸோலோ ஹெட்பக் கொலைகள் சம்பந்தமாகப் பிடிபட வேண்டியவர்களில் ஒருவன் என்பதைக் கண்டுபிடித்து விட்டான்!

பிலர்கள் ஹோகனைப் பலவிதமாகத் துன்புறுத்தினார்கள். கைகளாலும் தடிகளாலும் அடித்தார்கள். அடிமேல் அடிவிழுந்ததும், அவன் வாய் திறந்து ஒரு வார்த்தைகூடச்சொல்லவில்லை. ஒரு போலிஸ்காரன் தான்பிரீனும், டிரீஸியும் கைது செய்யப்பட்டிருப்பதாயும் அவர்கள் உள்ளதையெல்லாம் ஒளிக்காமல் சொல்லி விட்டதாயும் தெரிவித்தான். அவனும் உள்ளதைச் சொன்னால் தூக்கிலிடப்படாமல் லண்டனுக்குத் தப்பிப்போக வழி உண்டு என்பதையும் அவன் குறிப்பாக எடுத்துக்காட்டினான். ஸின் ஹோகன் போலிஸ்காரர்களின் வார்த்தைகளை நம்புவானா? அவனுடைய நண்பர்கள் உயிரை இழப்பினும் மானத்,

85