பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


தையும், கொள்கைகளையும் இழக்க மாட்டார்கள் என்பது அவனுக்கு வெகு நன்றாகத்தெரியும். ஆதலால் அவன் முற்றிலும் மெளனமாக இருந்துவிட்டான். போலிஸார் மேலும் பயமுறுத்தினார்கள், அடித்தார்கள், ஏசினார்கள், ஏமாற்றிப் பார்த்தார்கள், ஒன்றும் பயன்படவில்லை. பின்னால் 13ஆம் தேதி அவனைக் கார்க் ஜெயிலுக்குக் கொண்டிபோகையில்தான் ரயிலில் தோழர்கள் வந்து அவனை விடுதலை செய்தனர்.

வழியில் சார்ஜென்ட் வாலஸ் அடிக்கடி, 'தான்பிரீன் எங்கே? எங்கே?, என்று கேட்டு, ஒவ்வொரு கேள்வி கேட்கும் போதும் அவனைக் கத்தி முனையால் குத்தி வந்தானாம். ஹோகனுடைய உடம்பிலிருந்த புண்களே போலிஸாரின் திருவிளையாடல்களை எடுத்துக்காட்டின. ஆனால் சார்ஜென்ட் வாலஸ் மேற்கொண்டு உயர்ந்த உத்தியோகத்தைப் பெறமுடியாதபடி இவ்வுலகத்தை விட்டே புறப்பட நேர்ந்து விட்டது.

இனி, தான்பிரீன் முதலானவர்களைக் கவனிப்போம். கடைசியாக கான்ஸ்டபிள் ரெய்லி ஓடிய பிறகு, தான்பிரீனும் நண்பர்களும் ஸ்டேஷனை விட்டு வெளியேறினார்கள். அவர்களுடைய உடம்புகளிலும் உடைகளிலும் ரத்தம் கொட்டுவதைக் கண்டு மக்கள் திடுக்கிட்டுப் பல இடங்களிலும் சிதறி ஓடி மறைந்தனர். அந்த ஸ்டேஷனில் இம்மாதிரியான சம்பவத்தை அவர்கள் முன்னர் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. ஒருவரும் புரட்சிக்காரரை நெருங்கவேயில்லை. புரட்சி வீரர்களையும் கைதியையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர்களிருந்தனர்.

தான்பிரீனால் நடக்கவே முடியவில்லை. அத்துடன் அவனுடைய ரிவால்வரில் குண்டுகளும் காலியாகிவிட்டன. அவன் பக்கத்தில் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். வெளியிலிருந்து ஸ்டேஷனைப் பார்த்து ஒரு மோட்டார் கார் வந்து கொண்டிருந்தது. உடனே அவன் வெற்று ரிவோல்வரை நீட்டி அதை வழிமறுத்தி நிறுத்தினான். அந்த நிலையில் அவனைக் கண்ணுற்ற யாரும் இரக்கப்படாமலிருக்கமுடியாது. அவனுடைய தலை 'கிர்.. கிர்..' என்று சுழன்று கொண்டிருந்தது; உடம்பெல்லாம் இரத்தம் வழிந்தது; வழியில் ஒரு சுவரில் முட்டித் தலையிலிருந்து கண்னை மறைத்து இரத்தம் பொழிந்து கொண்டிருந்தது. அவனுடைய கால்கள் தள்ளாடி வீழ்ந்ததால் அவன் ஒரு கையால் பூமியைத் தடவிக் கொண்டே உருளலானான். அவனைப் பார்த்த சில மக்கள் அலறிக் கொண்டு ஓடினார்கள். கடைசியாக ஒரு புண்ணியவான் ஓடி வந்து உதவி செய்யலானான். அவன் காக்கியுடை தரித்திருந்த அரசாங்கப் பட்டாளச் சிப்பாய்! தான்பிரீன் அவன் கைமீது சாய்ந்து கொண்டே வீதியில் நடக்கலானான். அவனுடைய மூளையும் கலங்கியிருந்தது. முடிவில் ரிவால்வரைக் காட்டி நிறுத்திய காரை உபயோகிக்க அவனுக்கு ஞாகபமில்லை. வழியில் மற்ற நண்பர்கள் வீதியோரமாகக் காத்திருந்தனர். அவர்கள் ஒரு கசாப்புக்கடைக்கார

86