பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


னுடைய கத்தியை வாங்கி ஹோகனுடைய கைவிலங்குகளை உடைந்தெறிந்னர். நான்கு தொண்டர்கள் அவனை மிகவும் பந்தோபஸ்தான இடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றனர்.

தான்பிரீன், டிரீஸி, ஈமன் ஓபிரியன், ஸ்கான்லன் ஆகிய நால்வரும் ஷனாகனுடைய வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். சுற்றிலும் மையிருட்டாக இருந்ததால் பாதை சரியாய்த் தெரியவில்லை. இடையில் சில வாலிபர்கள் அவர்ளுக்கு வழிகாட்டி உதவி செய்தனர்.

வீடு சேர்ந்ததும் தான்பிரீன் ஒரு படுக்கையில் படுக்கவைக்கப்பட்டால், அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு பாதிரியாரும் வைத்தியம் செய்யப் புகழ்பெற்ற ஒரு வைத்தியரும் அழைத்து வரப்பட்டார்கள். வைத்தியருடைய பெயர் டாக்டர் ஹென்னெஸ்ஸி. அவ்விருவரும் நோயாளி 24 மணி நேரத்திற்குமேல் ஜீவித்திருக்கமாட்டார் என்று அபிப்பிராயப்பட்டனர். ஏனென்றால் தான்பிரீனுடைய சுவாசப்பையில் குண்டு பாய்ந்து மறுபுறத்தால் வெளியே போயிருதது. அத்துடன் உடலிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியாகியிருந்தது. தான்பிரீன்தான் உயிரோடிக்கக்கூடிய 24 மணி நேரத்திலுமாவது அமைதியாய் இருப்புதற்கு வழியில்லையே என்று வருந்தினான்.

அவன் படுத்திருந்த ஷனாகனுடைய வீட்டைச்சுற்றிலும் கிளான்ஸி என்பவனுடைய தலைமையின் கீழ் ஒரு தொண்டர்படை காவலுக்காக வைக்கபட்டிருந்தது. வேறு பல தொண்டர்கள் ஊரைச் சுற்றியுள்ள வீதிகளில் நிறுத்தப் பட்டிருந்தனர். போலிஸாருடைய தலை எங்காவது காணப்பட்டால் உடனே, தகவல் கொடுப்பதற்கும், அவர்கள் வீட்டுப் பக்கம் நெருங்கினால் எதிர்த்து போராடுவதற்குமே தொண்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். தான்பிரீன் உயிரேடிருக்கும் வரை பகைவர்கள் அவனைத் தொட்டுவிடாமல் இருப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் தொண்டர்கள் செய்து வைத்திருந்தனர். இங்கே இந்நிலையிருக்க, நாக்லாங்கிலும் அதன் சுற்றுப்புறத்திலும் டுன், ஊலர், கால்பல்லி முதலான பல கிராமங்களிலும் நகரங்களிலும் ஏராளமான பட்டாளத்தார்களும் போலிஸ்கார்களும் கொண்டுவரப்பட்டனர். தென் திப்பெரரியிலும், கிழக்கு லிமெரிக்கிலும் வீடு வீடாய்ச் சோதனை போடப்பட்டது. புதியதாய் மண் போடப்பட்டிருந்த சவக்குழிகள் எல்லாம் தோண்டிப் பார்க்கப்பட்டன. ஏனென்றால் இரண்டு புரட்சிக்காரர்கள் படுகாயமடைந்ததாயும் அவர்கள், இறந்து போய்ப் புதைக்கப்பட்டிருப்பார்கள் என்றும் போலிஸாருக்குத் தகவல் கிடைத்ததாம்.

தான்பிரீன் அதிக நேரம் ஓய்வெடுத்துக்கொள்ள வழியில்லை. சில மணி நேரம் கழியும் முன்பே தொண்டர்கள் போலிஸார் அங்கு வருவதாகத் தெரிந்து கொண்டார்கள். உடனே அவர்கள் ஒரு மோட்டார் காரைக் கொண்டுவந்து

87