பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


கள் வருத்தப்பட்டனர். ஆயினும் டிரீஸியின் கவலையற்ற இன்பகரமான தமாஷை யாவரும் அதுபவித்ததிலும் குறைவில்லை! இதுபோல் டிரீஸி தாடி தீப்பற்றி எரியும்போது பிடிக்கு நெருப்புக் கேட்பது வெகு நாள் பழக்கமாய்ப் போய்விட்டது.

கெரியில் தான்பிரீன் முதலானவர்கள் அடிக்கடி பத்திரிகை படிப்பது வழக்கம். அவற்றில் நாக்லாங் சம்பவத்தைப் பற்றிப் பலபொய்யும் புளுகுகளும் புனைந்துரைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் தொண்டர்களுடைய செயலைக் கண்டித்து அறிக்கைகளும் அபிப்பிராயங்களும் வெளிவந்தன. அரசர் பெருமான் தம்மிடம் கூலிக்கு வேலைபார்த்து நாக்லாங்கில் உயிர் கொடுத்தவர்களுடைய பந்துக்களுக்கும் ஐரீஷ் வைசிராய்க்கும் அனுதாபச் செய்தி அனுப்பியிருந்தார்.

கெர்ரியிலிருந்து தொண்டர்கள் ஷன்னான் நதிக்கரையின் வழியாக லிமெரிக் பகுதிக்குத் திரும்பினார்கள். அங்கு தினசரி ஆற்றில் முழுகுவதும் ஒய்வெடுத்துக் கொள்வதும் பழைய விஷயங்களையும் புதிய விஷயங்களையும் பற்றிச் சிந்திப்பதுமாகப் பொழுதைப் போக்கி வந்தனர். அவர்களுடைய காயங்களும் விரைவாகக் குணமடைந்து வந்தன. சும்மாயிருக்கும் நேரங்களில் அவர்கள் பிடித்து வந்த மீனுக்கு அளவேயில்லை. சுற்றிலும் ரகசியப் போலிஸ், கடியடிப் போலிஸ், பீரங்கிப் பட்டாளம், பற்பல அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து, அவர்களைப் பிடிப்பதற்காக எள்ளிருக்கும் இடத்தையும் விடாது தேடிக்கொண்டிருந்தனர். அந்த வேளையில் அவர்கள் ஸ்நானமும் பானமும் தவறாமல் மிக்க மனஅமைதியுடன் மீன் பிடித்து மகிழ்ந்து வந்தனர்!

89