பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


சிறிது காலத்திற்குப் பின் தான்பிரினும் அவன் தோழர்களும் போலிஸ்காரர்களையும் சிப்பாய்களையும் சுட்டுத் தள்ளி வந்ததைப் பற்றி நீண்ட விவாதங்கள் வெய்து வந்தனர். முடிவில் அது போதாதென்றும், வேறு சிலமுறைகளைக் கையாள வேண்டும் என்றும் தீர்மானித்தனர். பெரிய அதிகாரிகள் போலிலாரைத் தங்களுடைய வில்லுக்கேற்ற அம்புகளாக உபயோகித்து வந்ததால், எய்தவரை விட்டு அம்பை நோவதில் என்ன பயன்? சில போலிஸாரைச் சுட்டுத் தள்ளிவிட்டால் அதிகாரிகள் வேறு சிலரை நியமித்து விடுகிறார்கள். அதிகப் படிப்பில்லாத ஏழை மக்கள் ஏராளமாயிருக்கும் வரை தொப்பியும் சட்டையும் மாட்டி அவர்களைப் போலீஸ் வேலைக்கு நியமிப்பது எளிதாகவிருந்தது. மேலும், போலிஸாருடைய உயிர் பலிவாங்கப்படுவதை இங்கிலாந்து அதிகமாய்ப் பொருட்படுத்துவேயில்லை. எனவே பெரிய அதிகாரிகளை வதைத்தால் தான் இங்கிலாந்து கண்விழிக்கும் என்று புரட்சிக்காரர்கள் தீர்மானித்தார்கள். அரசாங்க தலைமை அதிகாரிகளைப் பழிவாங்கினால் தேசமெங்கும் தந்திகள் பறக்கும்; உலகமெங்கும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும்; சகல நாட்டார்களும் ஐரிஷ் அரசாங்கத்தில் ஏதோ கோளாறுகள் இருப்பதாகத் தெரிந்து கொள்வார்கள். ஆங்கில அதிகாரிகளும் ராஜதந்திரிகளும் துக்கமடைவார்கள். அயர்லாந்தில் ஆங்கில ஆட்சி ஒழுங்காக நடைபெறாமற் போகும். தொண்டர்கள் இவ்வாறு பலவிதமாக யோசனை செய்து, அயர்லாந்தின் வைசிராயான லார்ட் பிரெஞ்சைத் தாக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அம்முடிவைப் பலமுக்கியமான நண்பர்களுக்கு அறிவித்து அவர்களில் சிலரை உதவிக்கு வரும்படியாக அழைப்பனுப்பினர்.

லார்ட் பிரெஞ்சைச் சுடுவது சாமானியமான விஷயமில்லை. தரிசனம் கிடைப்பதே அரிது. அவர் வெளியே செல்லும் பொழுதுதெல்லாம் ஏராளமான பட்டாளத்தார் பாதுகாப்பிற்குச் செல்வது வழக்கம். அவர் எங்கு எப்பொழுது செல்லப்போகிறார் என்ற விஷயம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. முக்கியமான விஷேசங்களிலும் விழாக்களிலும் அவர் அடிக்கடி கலந்து கொள்வதில்லை. இக்காரணங்களினால் தான்பிரீன் கூட்டத்தார் அவர் சம்பந்தமாகத் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற முடியவில்லை. மூன்று மாத காலமாய் இரவு பகலாய் அவர்கள் திட்டங்கள் போட்டுப் பல இடங்களிலே அவரை எதிர்பர்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய இரகசிய தூதர்கள் ஓடி அலைந்து வைசிராய் செல்லுமிடங்களைப் பற்றி விசாரித்து அறிவித்து வந்தனர். 1919ஆம் வருடத்தின் கடைசி மூன்று மாதங்களிலும் தொண்டர்கள் 12 இடங்களில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் வைத்துக் கொண்டு காத்திருந்து ஏமாந்தனர். வைசிராய் வருகிற பாதையும் நேரமும் அவர்களுக்கு வெகு நன்றாய்த் தெரியும். எனினும் வைசிராய் அவர்கள் கையில் சிக்கவில்லை. ஏனென்றால் அவர் கடைசி நேரத்தில் முன்னால் போட்ட பிராயானத் திட்டங்களை அடியோடு மாற்றி விடுவார். தான் செல்ல வேண்டி இடங்க

95