பக்கம்:தாயுமானவர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் 哆 85 * ளால் சிறப்பித்துக் கொண்டாடப் பெறுவதாலும் வெளியிலே வீற்றிருப்பது என்றார். (ஒ) முடிவான தத்துவங்கள். எல்லாத் தத்துவங்கட்கும் முடிவான தத்துவங்கள் சிவன், சக்தி எனப்படும். அவை நாதவிந்து தத்துவங்களாதலின் அவற்றை அடிகள் சிறப்பாக இறைவனின் லயம் என்றார். வேதாந்தமாகிய உபநிடதங்கள் நூற்றொட்டினும் சிறந்த சைவ உபநிடதங்களிலே முடிவாகக் கூறப்படும் வீடும், சிவாகமமாகிய சித்தாந்தத்திற் கூறப்பெ றும் சிவப்பேறும் ஒன்றாம். ஆதலின் வேதாந்த சித்தாந்த நிலை தன்னிலே இறைவன் வீற்றிருப்பதென்று அடிகள் வினவினர். எல்லாப் பொருளையும் இறைவன் வடிவு என்று நோக் கும் பெரியோர்கட்கு அவர்கள் கண்ட பல பொருள்களும் இறைவன் வைகும் கோயில்களே யாகும். எல்லாச் சடப் பொருள்களும் ஒடுங்கிய இடத்து இறைவன் திருவருளே பன்றி வேறொன்றும் புலனாகாமையின் அவ்விடத்தைப் “யாழ்' என்றும், "சூனியம்' என்றும் கூறுவர். 'சுடுகாடு” என்பதும் அதுவே. மணிவாசகப் பெருமான் “கோயில் சுடுகா டு' என்று அருளியதை உற்று நோக்கினால் உண்மை புலனா கும். கால தத்துவமானது செயல்களையெல்லாம் வரைய றைப் படுத்துமிடத்து, முதல்வனை நினைவூட்டுவதாய், அவ னது ஞானசக்தியால் தொழிற்பட்டு நிற்றலின் அதனையும், எல்லாம் தோற்றுவித்ததற்கு மாயை, மாயையின் கண்ணே இறைவன் ஐந்தொழில் இயற்றுதலால் அவற்றையும் இறைவ னது இருக்கை இடங்களாகப் பேசினர். சித்தாகிய உயிர்களில் சிறந்த பேரன்பினராய் தொண்டர்களின் உள்ளத்தை இறை வன் கோயிலாகக் கொண்டமை அருள் நூல்களால் பெரிதும் வற்புறுத்தப் பெறுகின்றது. ஆதலின் அந்த நடமாடும் கோயி லையே இறுதியில் அமைத்து அடிகளார் செய்யுளில் இயம்பி னமை பாராட்டத்தக்கது. பெரிது பெரிது புவனம் பெரிது’ என்று தொடங்கும் ஒளவையார் தனிப்பாடல் ஒன்றில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/105&oldid=892092" இலிருந்து மீள்விக்கப்பட்டது