பக்கம்:தாயுமானவர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் அருங்குணங்கள் & 89 & என்பது 'சுகவாரி'யை நோக்கிப் பேசும் தாயுமானவரின் பேச்சு, 'சுகவாரி' என்பது இன்பத்தை விளைவிக்கும் நன்னி எனப் பொருள்படுகின்றது. பரமானந்தம் தெவிட்டிப் போகாத பேரின்பம். இறைவன் உவட்டாத சுகவாரி என்று பேசப்பெறுகின்றான். 'சுகவாரியே, நான் என்றும் உன்னை விட்டுப் பிரிந்ததில்லை. நீ என்று உள்ளாயோ அன்றிருந்து நானும் உன் அடிமையாக இருக்கின்றேன் அன்றோ?' என்று பேசுகின்றார் அடிகள். இதே கருத்தை அடிகள், “என்றுளைநீ அன்றுளம்யாம்' - கல்லாலின் 17 என்று பிறிதோரிடத்திலும் கூறுவதைக் காணலாம். இதனால் பசுவாகிய உயிர் பதியாகிய இறைவனுக்கு என்றும் அடிமை யாக உள்ளது என்ற சித்தாந்தக் கருத்தை அடிகள் வெளியிடு கின்றார் என்பது அறியப்படும். இதனால் உயிர்கள் - ஆன் மாக்கள் - இறைவனால் படைக்கப்பட்டன அல்ல என்ற உண்மையும் தெளிவாகின்றது. இறைவன், உயிர், பாசம் என்ற மூன்றையும் பிறிதோர் இடத்தில் அடிகள் குறிப்பிடுவார். 'அருளுடைய பரம்என்றோ அன்று தானே யான் உளன்என்றும்,எனக்கே ஆனவாதி பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப் பேசியதன் றே:அருள்நூல் பேசிற் றன்றே." - ஆகாரபுவனம் - 29 என்ற பாடற்பகுதியில் இவற்றைக் காணலாம். இதில் பரம் பொருளாகிய இறைவன் கைம்மாறு கருதாத கருணையொன் றினால் உலகத்தோடு தொடர்புடையவன். அவன் ஆணவம், கன்மம், மாயை (இவை மூன்றும் பாசத்தில் அடங்கும்) என்ற தளைகள் இல்லாதவன். இக் கட்டுகள் யாவும் ஆன்மாவுக்கே உள்ளவை. இங்ங்னம் அருள் நூல்களாகிய சைவப் பனுவல் கள் புகல்வதை அடிகளும் தமது துணிபாகக் கொள்வர் என்பதை நாம் அறிய முடிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/109&oldid=892096" இலிருந்து மீள்விக்கப்பட்டது