பக்கம்:தாயுமானவர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் அருங்குணங்கள் ఊ 91 శ சார்ந்தபொழுது இருள்வடிவமாயும் நிற்றலை அறிகின்றோம். இங்கும் கண்ணின் ஒளி இவ்வாறு மாறுவதாயினும் கண்ணிற் கென்று ஒளி உண்டு என்பதை அறிவோம். இவ்வாறே பசுவாகிய ஆன்மாவுக்கும் ஓர் அறிவு உண்டு என்பதை அறிதல் வேண்டும். இந்த அறிவு அறியப்படும் பொருளின் தன்மையாய் மாறும் என்பதும் தெளியப்படும். எனவே, 'சார்ந்ததன் வண்ணமாதல் என்பது உயிரின் தன்னியல்புக எரில் (Essertial nature) முதன்மையானது என்பது உணரப்ப டும். இதனால் உயிர்கள் எப்பொழுதும் தனித்து நின்று விளங்காது எனவும், ஒரு பொருளின் துணை கொண்டே அஃது அறியப்படும் எனவும் தெளிவாகின்றது. சித்தாந்தக் கருத்துப்படி உயிர்கள் பெத்த நிலையில் பாசத்தோடும், முத்தி நிலையில் பதியோடும் வைத்தே அறியப்படுவனவா கும். இக்கருத்து, 'அறியாமை சாரின் அதுவாய், அறிவாம் நெறியான போதுஅதுவாய் நிற்கும்” - உடல்பொய்யுறவு - 22 என்ற பாடற்பகுதியாலும் அறியப்படும். (2) ஆன்மாவும் ஆணவமும் சார்ந்ததன் வண்ணமாகிய தன்மை உயிருக்கு உண்டு என்பதை மேலே கண்டோம். இதனால் உயிர் அறிவில்லாத பொருளோடு சார்ந்து அதன் மயமாயிருப்பினும், அந்தச் சார்பினின்று விடுதலையடையத் தக்க பாங்கு உயிருக்கு (ஆன்மாவுக்கு) உண்டு. இதனால் தான் அடிகள் உயிரைப் பளிங்கனைய சித்து என்று குறிப்பிடு கின்றார். பளிங்கு தான் சாரும் பொருளைத் தன்னகத்தே காட்டும். ஆனால், பளிங்கு அறிவில்லாப் பொருள்; ஆன்மா அறிவுடைய பொருள். ஆன்மாவுக்குச் சார்புபற்றிய இயல்பு இல்லையாயின், அறியாமையாகிய ஆணவக் கட்டினின்றும் அதனை விடுவித்தல் ஒருவர்க்கும் இயலாது. அங்ங்னமா யின் உலகப்பற்றே அதன் தன்மையாகக் கொள்ள வேண்டி யிருக்கும். இங்கனம் எங்ளுான்றும் சடப்பற்றே உயிருக்குள் ளதாயின், அது சடத்தை விட்டு இறைவனைப் பற்றுவதெங் கனம்? இறைவன் அதன் இயல்பை எவ்வாறு மாற்றமுடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/111&oldid=892100" இலிருந்து மீள்விக்கப்பட்டது