பக்கம்:தாயுமானவர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 92 స్థ தாயுமானவர் யும்? மாற்ற முடியாதாயின் இறைவனின் ஐந்தொழில்கள் பயனற்றனவாய் முடியுமன்றோ? இது சித்தாந்த உண் மைக்கு முரணாகவும் முடியும். ஆதலால் ஆன்மாவின் தன்மை ஆணவத்தோடு எக்காலத்தும் அத்துவிதமாய் இருப் பதன்று. ஆணவத்தை ஒழிக்கப் பெறும் தன்மை அதற்கு இருத்தலால்தான் அடிகள் பந்தமறும் சித்துநீ என்றும், "ஆணவத்தோ டத்துவிதம் ஆனபடி மெய்ஞ்ஞானத் தானுவினோ டத்துவிதம் சாருநாள் எந்நாளோ?” - எந்நாட். நிற்கும் நிலை 28 என்றும் உரைக்கின்றார். பதியைப்போல பசு அறிவுடைய பொருளாயின் அஃது ஆணவம் முதலிய கட்டுக்குள் அகப்படாது. மாயைபோல அறிவில்லாப் பொருளாயின் அஃது அறிவுடைய பதியை ஒருக்காலும் அறிய மாட்டாது. ஆதலால் அடிகள், 'அறிவறி யாமையும் நீயல்லை’ - ஆகாரபுவனம் 18 என்கின்றார். இறைவன் எக்காலத்தும் ஆணவம் முதலிய கட்டு இல்லாதவராதலால் உயிர்களை ஆணவத்தோடு பிணித் தவர் இறைவன் அல்லர் என்பது தெளிவாகின்றது. கடவுளைத் தனக்கு உயிராகப் பெற்ற உயிர் தானே நன்மையும் தீமையும் அறியவல்லதாயின் அறியாமையாகிய ஆணவக் கட்டுக்குள் அகப்படாது அறிவுடைப் பொருளா கிய முதல்வனையே பற்றி நிற்கும். அவ்வாறு நில்லாது ஆணவக் கட்டுடையதாயிருத்தலின் அஃது அறிவிக்க அறி யும் இயல்புடையதென்பது தெளிவாகின்றது. இக்கருத்து பற்றியே அடிகள், 'சதசத் தருளுணர்த்தத் தானுணரா நின்ற விதமுற் றறிவெனும் பேர்மெய்" - உடல்பொய்யுறவு 22 என்று அருளிச் செய்வர். இதை விளக்குவது இன்றியமையா தது. இயற்கை அறிவுடைமையால் என்றும் மாறாத பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/112&oldid=892101" இலிருந்து மீள்விக்கப்பட்டது