பக்கம்:தாயுமானவர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் அருங்குணங்கள் 'சத்து' என்று வழங்கப்படும். அசித்தாகிய ಆಸ್ತ್ರಕ್ಕರ್ಣಿ நிலை மாற்றத்தை அடைதல்பற்றி அசத்து எனப்படும். உயிர் சத்தோடு சேரும்போது சத்தாயும், அசத்தோடு சேரும்போது அசத்தாயும் இருக்கும் தன்மையாதலின் உயிர் சதசத்து என்ற மற்றொரு பெயராலும் வழங்கப்படும். திருவருள் உயிருக்கு உணர்த்துவதனால் அஃது உணருகின்றது. இத னால் உயிருக்கும் அறிவுடையதென்ற பெயர் உண்டு. இதனை அடிகள், "நீயுணர்த்த நானுணரும் நேசத்தா லோஅறிவென் றேயெனக்கோர் நாமமிட்டதே." - உடல்பொங் புறவு 14 என்ற திருவாக்காலும் அறியலாம். ஆணவம் அற்ற நிலையில் இருக்கும் உயிர் தனக்கு உயிராகிய முதல்வனைப் பற்றி நிற்கும். முதல்வன் பாலும் அறியாமை யாதும் இல்லை. ஆதலால் இத்தகைய உயர்நி லையிலிருந்து தனக்கு முரணான ஆணவக் கட்டிலே உயிர் சென்று வருவதற்கு இடம் இல்லை. இதனால், 'திது இலாவிளக்கு எடுத்துஇருள் தேடவும் சிக்காது; ஆத லால்அறி வாய்நின்ற இடத்துஅறி யாமை ஏதும் மில்லை” - ஆசையெனும் 11 என்று அடிகள் அருளிச் செய்வர். இதனால் உயிர் முதல் வனை அடைவதற்கு முன்னர் அஃது ஆணவக்கட்டில் கிடப் பதாகும் என்பது அறியப்படும். இங்ஙனம் அஃது எப்பொ ழுது அக்கட்டிற்கு உள்ளாயது என்பது அறுதியிட்டுக் கூற வொண்ணாது. ஆதலின் அஃது அனாதியே ஆணவத் தொடர்புடையது என்பது சிந்திக்கத் தக்கதாகும். மேலும் நாம் அறியத்தக்கவை: உடல் முதலியவற்றை இறைவன் உயிருக் குக் கொடுத்தான்; ஆணவத்தையும் அதற்குக் கொடுக்க வல்லவன். உயிர்கள் ஐம்பொறிகள் வாயிலாகப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/113&oldid=892102" இலிருந்து மீள்விக்கப்பட்டது