பக்கம்:தாயுமானவர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 94 & தாயுமானவர் களை அறிகின்றன. உடம்பெடுக்குமுன் உயிர் நின்ற நிலை ஆணவத்தோடு அத்துவிதமாய் அறிவின்றி விளங்கப் பெறாத இருள். நிலை. இந்த நிலையை அடிகள், 'அறிவின்றி நிற்கும் குறியேன்” - உடல் பொய்யுறவு ! என்றும், 'காரிட்ட ஆணவக் கருவறை" - சின்மையானந்தகுரு - 6 என்றும் குறிப்பிடுவர். கருவறையில் சிசு தன் ஆற்றலையெல் லாம் ஒடுக்கி வைத்துக் கொண்டுள்ளது. சிசு கண் கொண்டு பார்ப்பதில்லை; காது கொண்டு கேட்பதில்லை; மூளையைப் பயன்படுத்தி எண்ணுவதுமில்லை. அறிவு அதனிடத்து ஒடுங் கிக் கிடக்கின்றது. முன்பு பல பிறப்புகளில் பெற்றுள்ள அநுபவங்களின் விளைவாக ஒருவிதத்தில் அச்சிசு அறிவுற் றது எனினும், அஃது அறிவு அற்றதாகவே கருவறையில் கிடக்கின்றது. இதே நிலையில்தான் ஆணவம் படைத்த உயிர் களும் உள்ளன. கருவறை வாசம் ஒரே இருள்மயமாக இருப்பதுபோலவே, ஆணவத்தில் அடைபட்டுக் கிடக்கும் உயிர்களும் அஞ்ஞானம் என்னும் காரிருளால் மூடப்பட்டுக் கிடக்கின்றன. கருவறையில் சிசுவின் குறைபட்ட நிலையில் ஆணவம் படைத்துள்ள உயிர்களும் இருக்கின்றன. இவ் வாறு அடிகள் தம்மைக் குறிப்பிட்டுப் பேசுகின்றார். இந்நி லையைச் சித்தாந்த நூலோர் கேவலமாகிய மறப்பு நிலை" என்பர். இந்நிலையில் கிடக்கும் உயிரை அறிவுடையதென் றல் பொருந்தாது. ஆகவே, அடிகள், 'அறிவென்ற கோலம்வறிதே' - உடல் பொய்யுறவு - 4 என்று கூறுவார். (3) திரோதான சக்தி: மும்மலங்களின் வேறாக மறைப்புச் சக்தியாகிய திரோதான சக்தியையும் மாயையினாலாகிய உல 5րավ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/114&oldid=892103" இலிருந்து மீள்விக்கப்பட்டது