பக்கம்:தாயுமானவர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் அருங்குணங்கள் 'அண்டமுமாய்ப் பிண்டமுமாய் அளவிலாத ஆருயிருக் கோருயிராய் அமர்ந்தாய்" - ஆசையெனும் 12 என்றும், 'எண்ணில்பல கோடிஉயிர் எத்தனையோ அத்தனைக்கும் கண்ணிற் கலந்தஅருட் கண்ணே பராபரமே!” - பராபரம் 277 என்றும் அருளிச் செய்வர். உயிர்கள் எண்ணிறந்தன என் பதை மெய்ப்பிப்பதற்குச் சான்று ஒன்றும் வேண்டா. ஒர் உயிர் ஓர் உடம்பில் நின்று அநுபவிக்கும் இன்ப துன்ப அநுபவங்கள் - நுகர்ச்சிகள் - மற்றோர் உயிருக்கு இல்லாமை யால் ஒவ்வோர் உடம்பில் உள்ளதும் தனித்தனி வேறுவேறு உயிரே என்பது எளிதில் தெளிவாகும். (5) உயிரின் பல்வகை நிலைகள்: உலகப் பற்றும் இல் லாது, கடவுட் பற்றும் இல்லாதவிடத்து மனம் கேவல நிலையில் வழுவிவிடும். 2 இதனை அடிகள், "பற்றினதைப் பற்றும்எந்தாய் பற்றுவிட்டால் கேவலத்தில் உற்றுவிடும்; நெஞ்சம்உனை ஒன்றிநிற்ப தெப்படியோ?” - - பலவகைக் கண்ணி - 18 என்று குறிப்பிடுவர். இதனால் உயிர் ஏதாவதொன்றைப் பற்றி நிற்கும் என்பது தெளிவு. உலகத்தையாவது கடவுளை யாவது உயிர் பற்றாதவிடத்து அஃது அறியாமையைப் பற்றி நிற்கும். அறிவுள்ள உயிருக்கு அறியாமை இன்பம் தராது. இதனால் உயிருக்குத் தன்னில் தானே ஓர் இன்பம் இல்லை என்பது தெளிவு. உயிர் தன்னிலே இன்பம் உடையதன்று என்றும், உயிர் தன்னையறிந்தால் திருவருளின் உண்மையு ணர்ந்து தலைவனையே பற்றி நிற்குமேயன்றிப் பிறிதொன்றி னையும் பற்றாது என்றும் மூன்று கண்ணிகளில் வற்புறுத்து வர் அடிகள். 2. கேவலம் என்ற சொல் தனிமை என்று பொருள்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/117&oldid=892106" இலிருந்து மீள்விக்கப்பட்டது