பக்கம்:தாயுமானவர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 98 & தாயுமானவர் “எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ சித்துருவே இன்பச் சிவமே பராபரமே! (31) தன்னை அறிந்தால் தலைவன்மேல் பற்றலது பின்னைஒரு பற்றும்உண்டோ? பேசாய் பராபரமே! (94) தன்னை யறிந்தருளே தாரகமா நிற்பதுவே உன்னை அறிதற்கு உபாயம்; பராபரமே!’ (95) என்ற மூன்று கண்ணிகளில் இதனைக் கண்டு தெரியலாம். 'குறிக ளோடுகுனம் ஏதும் இன்றி.அனல் ஒழுக நின்றிடும் இரும்பு,அனல் கூட லின்றி அதுவாய் இருந்தபடி கொடிய ஆணவ அறைக்குள்ளே அறிவ தேதும்அற, அறிவி லாமைமய மாய் இருக்கும்.எனை, அருளினால் அளவி லாததனு கரண மாதியை அளித்த போதுனை அறிந்துநான் பிறிவி லாதவனம் நின்றி டாதபடி பலநிறங்கவரும் உபலமாய்ப் பெரிய மாயையில் அழுந்தி, நின்னது ப்ரசாத நல்லருள் மறந்திடும் சிறிய னேனும் - சிற்சுகோதய விலாசம் - 2 என்ற இந்தப் பாடலில் உயிரின் கேவல நிலையும் சகல நிலையும் குறிப்பிடப் பெற்றிருத்தல் அறியப்படும். (அ) கேவல நிலை: உயிர் ஆணவ மலத்தோடு மட்டும் இருக்கும் நிலை கேவலம் ஆகும். இந்த நிலையில் ஆன்மா விற்கு அறிவு இச்சை செயல் இல்லை. உடம்பும் இல்லை. உட்கருவிச் செயல்களாகிய மனம் முதலியனவும் இல்லை. அதனால் வினைகளை ஈட்டுவதும் இல்லை. அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை நுகர்வதும் இல்லை. குறிக ளோடும்.... அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை' என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/118&oldid=892107" இலிருந்து மீள்விக்கப்பட்டது