பக்கம்:தாயுமானவர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் அருங்குனங்கள் & 101 & இவண் குறிப்பிட்ட மூன்று நிலைகளும் காரண அவத்தை என்று வழங்கப்பெறும். இறைவன் உடம்பைக் கூட்டுவ தற்கு முன் இருந்த நிலை அனாதி கேவலம். அன்றாடம் வரும் கேவல நிலை நித்திய கேவலம். மேற்குறிப்பிட்ட மூன்று அவத்தைகளையும் வேறு இரண்டு பாடல்களில் குறிப்பிட்டுள்ளமையையும் காண லாம். அப்பாடல்கள்: 'காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண் டிருந்தளமை வெளியில்விட் டல்லலாம் காப்பிட் டதற்கிசைந்த பேரிட்டு, மெய்யென்று பேசும்பாழ்ப் பொய்யுடல் பெலக்கவிளை அமுதமூட்டிப் பெரியபுவ னத்திடை போக்குவா வுறுகின்ற பெரியவிளை யாட்டமைத்திட்டு ஏரிட்ட தன்சுருதி மொழிதப்பின் நமனைவிட்(டு) இடர்உறஉருக்கி, இடர்தீர்த்து இரவுபகல் இல்லாத பேரின்ப வீட்டினில் இசைந்துதுயில் கொண்மின் என்று சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே!” - சின்மையானந்த குரு - 6 “கருமருவு குகையனைய காயத்தின் நடுவுள் களிம்புதோய் செம்பனையயான் காண்தக இருக்கநீ ஞானஅனல் மூட்டியே கனிவுபெற உள்உருக்கிப் பருவமது அறிந்துநின் னருளான குளிகைகொடு பரிசித்து, வேதிசெய்து, - பத்துமாற் றுத்தங்க மாக்கியே பணிகொண்ட பட்சத்தை என்சொல்லுவேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/121&oldid=892111" இலிருந்து மீள்விக்கப்பட்டது