பக்கம்:தாயுமானவர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 102 • தாயுமானவர் அருமைபெறு புகழ்பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம்மீதும் அத்துவித நிலையராய் என்னையாண்டு, உன்னடிமை யானவர்கள் அறிவினுாடும் திருமருவு கல்லால் அடிக்கிழும் வளர்கின்ற சித்தந்த முத்தி முதலே' - மேலது ? இப்பாடல்களில் அமைந்துள்ள மூன்று நிலைகளையும் எடுத்து விளக்குவோம். (1) கேவலாவத்தை காரிட்ட ஆணவக் .... கட்டுண்டு இருந்த எமை: கருப்ப வாசம் ஒரே இருள்மயமானது. அங் குள்ள சிசு கண் கொண்டு பார்ப்பதில்லை. காது கொண்டு கேட்பதில்லை. மூளையைப் பயன்படுத்தி அஃது எண்ணுவ தும் இல்லை. அஃது அறிவற்றதாகக் கருப்பத்தில் கிடக்கின் றது. கருப்பையை விட்டு எங்குச் செல்வதற்கும் அதற்குச் சுதந்திரம் இல்லை. கருப்பத்தில் சிசுவினுடைய குறைபட்ட நிலையில் ஆணவம் படைத்துள்ள மனிதன் இருக்கின்றான் (முதல் பாடல்). கருமருவு குயைனைய.... காண்தக இருக்க: மூன்று பொருள்கள் ஒன்றோடொன்று ஒப்பிடத் தகுந்தவைக ளாக உள்ளன. ஒன்று தாயின் கருப்பை. மற்றது மலையின் கண் உள்ள குன்க. மூன்றாவது பொருள் மூசை என்பது." கருவின்கண் வைக்கப்பெற்றுள்ள சிசு ஒன்று குகைவாசம் பண்ணுவதுபோன்று அக்கருவிலிருந்து கொண்டு வளர்ந்து வருகின்றது. பிறவிப் பிணியைப் போக்குவதற்கு யோகி குகையினுள் நிட்டை புரிந்து தனது மனத்தின் அமைப்பை மாற்றுகின்றான். தெய்வத்தின் துணை கொண்டு தன்னை மேலான வனாக மாற்றி விடுகின்றான். இங்ங்னமே மூசையில் குறையுடைய உலோகங்களை உருக்கிச் சுத்தப்படுத்துகின்ற னர். இரசவாத வித்தைக்கும் இது பயன்படுகின்றது. 5. மூசை: இது தாமிரம் முதலிய உலோகங்களை உருக்கி எடுப்பதற்கென்று அமைந்துள்ள ஒருவகை மட்பாண்டம். (பொற்கொல்லர் பட்டறையில் பயன்ப டுவது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/122&oldid=892112" இலிருந்து மீள்விக்கப்பட்டது