பக்கம்:தாயுமானவர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 104 & தாயுமானவர் மனிதன் அல்லல்படுவதற்கு உடல் வாழ்க்கையே முக் கிய காரணமாக அமைகின்றது. மனித உடல் பல பொருள் கள் கூடி உருவெடுத்தது. அப்பொருள்களாகிய இரத்தம், மாமிசம், எலும்பு, கொழுப்பு முதலியன ஓயாது உருமாறி அமையும் தன்மையுடையவை. எளிதில் அழிந்துபட்டுப் போவதும் அவற்றின் இயல்பு. அழிந்துபடுபவைகள் அனைத்தும் பாழானவைகள். ஆகவே, மெய்யென்று பேசும் பாழ்ப் பொய்யுடல் ஆகின்றது. உண்டி அமுது என்று பெயர் பெறுகின்றது. உணவு உண்பதன் மூலம் மனிதன் மர ணத்தை ஒத்திப் போட்டு வருகின்றான். உணவை உண்டு செரிமானம் செய்வதால் அது வளர்ந்து பெலக்கவும் செய்கின் றது. உண்டியில் வைத்த ஆசை உடல் வாழ்க்கையில் வைத்த ஆசையின் விளைவு. ஆகவே, உண்டியைப் பெருமகிழ் வோடு ஏற்கின்றான். எனவே, 'பெலக்கவிளை அமுதுட்டு கின்றான். இத்தகைய உடலுடன் இவன் பூமியில் பல ஆண்டுகள் நடமாடுகின்றான். சிறிது காலம் சென்ற பிறகு அவனுக்கு ஒய்வு அவசியமாகின்றது. ஒய்வுக்கு மரணம் என்பது மற். றொரு பெயர். பிறப்பு - இறப்பு ஓயாது நிகழ்ந்து கொண்டி ருப்பவை. உலக வாழ்க்கை ஒரு விளையாட்டாக அமைகின் றது. இதில் இனிமை ஒன்று உள்ளது. விளையாடத் தெரிந்த வர்கள் வெற்றியையும் தோல்வியையும் ஒரே பாங்கில் ஏற் றுக் கொள்வர். இதை விளையாட்டாக வைத்துக் கொள்வது தான் வாழ்க்கையின் குறிக்கோள். பெரிய புவனத்தினிடை விளையாட்டு அமைத்திட்டு என்று அடிகள் இதைப் பேசுகின் றார். பரம்பொருளைப் பற்றிய பேருண்மைகளே வேதாந்தம். இவை இறைவனின் ஆணைகள். இறைவனும் அவனிடமி ருந்து வந்துள்ள ஆணையும், இணை பிரியாதவை. வேதாந் தம் என்னும் கோட்பாடுகளில் அழகும் நன்மையும் பொலி கின்றன. இவற்றை முறையாக அனுட்டித்தால் நன்மையும், புறக்கணிக்கும் பொழுது அழகும் நலனும் அழிவதால் தீமை யும் ஏற்படுகின்றன. பொது நன்மைக்கென்று அமைந்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/124&oldid=892114" இலிருந்து மீள்விக்கப்பட்டது