பக்கம்:தாயுமானவர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் அருங்குணங்கள் & 105 & சட்டதிட்டங்களை மீறி நடக்கின்றவர்கட்கு இடர்கள் அல்லது துன்பங்கள் வருகின்றன. சாலைப் போக்குவரவுகளில் ஏற்ப டும் விபத்துகள் உள்ளன. இவற்றைச் செய்விப்பவன் நமன் என்டான். மக்கள் இயற்கை நெறியிலிருந்து வழுவும் பொழுது எல்லாம் இடர்களை அவன் விளைவிப்பான். பல காலம் இடர்ப்பட்டவர்கள் - சீவர்கள் - உயர்ந்த அநுபவத் தால் நன்னெறியில் நிலைப்பதால் இடர்கள் தீர்ந்து விடுகின் றன. (இவை முதற்பாடலின் கருத்துகள்). இரண்டாவது பாடலில் நீ ஞான அனல் மூட்டியே.... பட்சத்தை என் சொல்லுகேன் என்பதன் பொருள்: குறைநி லையை நிறைநிலையாக்க மாறுதல்கள் செய்யப் பெறுதல் வேண்டும். எ-டு: செம்பைத் துலக்குவதால் அதனுள் படிந் துள்ள களிம்பை அறவே அகற்ற முடியாது. அதை ஒரு மூசையில் போட்டு வைத்து தீ மூட்டி முறையாக உருக்கி, இளகி வரும் பக்குவத்தைச் சரியாக அறிந்து அதற்கு ஒத்த குனிகை ஒன்று சேர்க்கப்பட்டால் களிம்பு நிரந்தரமாகவே நீங்கிவிடுகின்றது. இந்தச் செயலை ஒத்தது இறைவனுடைய அருளைத் துணையாகக் கொண்டு ஞானசாதனம் புரிகின்றவர் களின் செயல். செம்பைத் தூய்மையாக்கப் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய தீ மூட்டப் பெறுகின்றது. சீவன் பரம் பொருள் ஆவதற்கு ஞான அனல் மூட்டப் பெறுகின்றது. இத்தகைய மேலான எண்ணத்தை எண்ணி எண்ணி ஆன்ம சாதகன் உள்ளுருகி தபசு செய்யும்பொழுது தனது மனஅமைப்பை உருக்குகின்றான். மனம் பரிபக்குவம் அடைகின்றது. இத னால் ஆன்ம சாதகன் நிறை ஞானி ஆய்விடுகின்றான். இவன் உலகம் என்னும் குப்பையில் இருந்தாலும் பொன்னுக்கு ஒப்பானவனாய் விடுகின்றான். (இவை இரண்டாவது பாட லின் கருத்துகள்). இந்த இரண்டு பாடற் பகுதிகளாலும் சகலாவத்தை புலனாகின்றது. (3) சுத்தாவத்தை இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டினில் -** * * கொண்மின் என்று சீரிட்ட உலகன்னை வடிவான எந்தை' என்ற முதற்பாடலின் கருத்து: தி நெறியிலிருந்து நன்னெறிக்கு வருகின்ற மனிதனுக்கு இரண்டு வித நிலைகள் அமைகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/125&oldid=892115" இலிருந்து மீள்விக்கப்பட்டது