பக்கம்:தாயுமானவர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 106 渗 தாயுமானவர் றன. இடர் தீர்ந்திருப்பது உடனே கிடைக்கும் வாய்ப்பு. இது பசிப்பிணியை அகற்றுவதற்கு ஒப்பானது. பேரின்பம் எய்து தல் அடுத்த பகுதியாகின்றது. நல்லுணவைச் சுவைப்பதற் கொப்பானது இது. பேரின்பம் ஒன்றே மனிதனுடைய உண் மையான நிலை. அஃது அவனுக்குச் சொந்தமான இருப்பிட மாதலால் அதற்கு வீடு' என்ற பெயரும் உண்டு. இவ்வீடு உலகிலுள்ள வீடு போன்றதன்று. இங்கு இருப்பது அழியும் தன்மையுடையது; காலத்துக்கு உட்பட்டது. எனவே, இதற்கு இரவு பகல் உண்டு. பேரின்ப விடோ பிரபஞ்ச வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. அதுகாலம் நடையாடாத இடம்; இரவு பகல் அங்கு இல்லை. துன்பமாக மாறி அமை யும் சிற்றின்பத்திற்கு ஆங்கு இடம் இல்லை. ஒப்பற்ற பேரா னந்தமே ஆங்கு எஞ்சியுள்ளது. சன்மார்க்கத்தில் செல்லும் ஆன்ம சாதகனுக்கு இத்தகைய பெரும் பேறு கிட்டுகின்றது. இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டில் இசைந்து, துயில் கொள்ளுமாறு இறைவன் பணிக்கும் இடம் இது. துயில் கொள்ளுதல் என்பது செயலற்ற நிலை என்பதைக் குறிக்கின் ற்து. இறைவனைத் தாயாகவும், தந்தையாகவும் கருதுவது ஆன்றோர் வழக்கு. 'தாயும் ஆனார்’ என்ற தொடரிலுள்ள வரலாறு இதனைத் தெளிவாக்கும். அர்த்தநாரீசுவரன், தையல் பாகன், மங்கை பங்கன் என்ற இறைவனின் திருப் பெயர்கள் சீரிட்ட உலகன்னை வடிவான எந்தை' என்ப தற்கு விளக்கமாக அமைகின்றன. (இவ்விளக்கம் முதற் பாடலின் பகுதி பெறுகின்றது). இரண்டாவது பாடலின் அருமை பெறு புகழ் பெற்ற.... சித்தாந்த முத்தி முதலே' என்பதன் விளக்கம் இது: வேதாந்த சித்தாந்த நூல்கள் இறைவன் தத்துவத்தை விளக்க எழுந் தவை. பிரபஞ்சத்தின் நடைமுறையைப் புகட்டுவன வேதங் கள்; பிரபஞ்சத்துக்கு அப்பாலுள்ள பரம்பொருளை விளக்கு கின்ற நூலே வேதாந்தம். சைவ சமய நூல்கள் சித்தாந்தம் என்பவை. இவை பரம் பொருளை விளக்குவதால் அழியாப் புகழ் பெற்றவை. அத்துவித நிலை (இரண்டற்ற நிலை)யை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/126&oldid=892116" இலிருந்து மீள்விக்கப்பட்டது