பக்கம்:தாயுமானவர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 108 & தாயுமானவர் 'சாக்கிரமாம் நுதலினில்,இந் திரியம் பத்தும்; சத்தாதி வசனாதி வாயு பத்தும்; நீக்கமில்அந் தக்கரணம், புருட னோடு நின்றமுப் பானைந்தும் நிலவும்; கண்டத் தாக்கியசொப் பணமதனில் வாயு பத்தும்; அடுத்தகத் தாதிவச னாதி யாக நோக்குகர ணம்புருட னுடனே கூட, நுவல்வரிரு பத்தைந்தா நுண்ணி யோரே சுழுத்திஇத யந்தளிற்பி ராணம், சித்தம், சொல்லரிய புருடனுடன் மூன்ற தாகும்; வழுத்தியாநா பியில்துரியம்; பிரான னோடு மன்னுயுரு டனும்கூட வயங்கா நிற்கும்; அழுத்திடுமூ, லந்தன்னில் துரியா திதம்; அதனுடனே புருடன்ஒன்றி அமரும்; ஞானம் பழுத்திடும்பக் குவரறிவர் அவத்தை ஐந்திற் பாங்குபெறக் கருவி நிற்கும் பரிசுதானே! - ஆசையெனும் 25,26 இந்த இரண்டு திருப்பாடல்களின் கருத்தை விளக்குதல் இன்றியமையாதது. சாக்கிரம்: ஆன்மாக்கட்கு இந்த அவத்தை நிகழ்தற் குரிய இடம் நுதல் (நெற்றி). தத்துவம் 36இல் சிவதத்துவமாகிய சுத்தவித்தை, ஈசுவரம், சாதாக்கியம், சத்தி, சிவம் ஆகிய ஐந்தும்; வித்தியா தத்துவங்களில் புருடன் நீங்கலாக காலம், நியதி, கலை, வித்தை, அராகம், மாயை ஆகிய ஆறும்; நிலம், நீர், தீ, வளி, விசும்பு ஆகிய ஐந்தும் ஆகப் பதினாறு கருவிகளும் நீங்கி நின்ற அகக் கருவிகள் இருபதும், புறக்கருவி கள் 60இல் பிராணன், உதானன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்ச யன் ஆகிய வாயுக்கள் பத்தும், வாக்காதியின் வழித்தான வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் ஆகிய ஐந்துடன் கூடிய முப்பத்தைந்துடன் இலாடத் தானத்தில் நின்று கண்டு கேட்டு உண்டு உயிர்ப்பது நீங்கி மயக்கத்தைப் பொருந்தி அறிகருவிகளையும் செலுத்தும் கருவிகளையும் கைவிட்டுப் பொருந்தி நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/128&oldid=892118" இலிருந்து மீள்விக்கப்பட்டது