பக்கம்:தாயுமானவர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் அருங்குணங்கள் & 109 & சொப்பனம்: இதன் இடம் கண்டம் (கழுத்து). இங்கு ஆன்மா மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகிய அறிகருவி கள் ஐந்தும்; வாக்கு, பாதம், பாணி பாயு உபத்தம் (மொழி, கால் கை, எருவாய், கருவாய்) ஆகிய தொழிற் கருவிகள் ஐந்தும் ஆகிய பத்தும் இலாடத்தானத்தல் நிற்க, மேற்குறிப் பிட்ட 35 கருவிகளுள் 25 கருவிகள் நின்று சூக்கும தேகத்தாற் பயன்கொண்டு பொருந்தி நிற்கும். சுழுத்தி: இதன் இடம் இதயம். பிராணவாயு நீங்கலாக வாயுக்கள் ஒன்பது, சித்தம் நீங்கலாக அந்தக்கரணம் மூன்று, சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, ஆகிய 22-உம் நிற்க, சித்தம், பிராணவாயு, புருடன் ஆகிய மூன்று கருவிகளுடன் ஒன்றும் தெரியாது பொருந்தி நிற்கும். துரியம்: இதன் இடம் உந்தி (நாபி). சித்தம் மாத்திரம் இதயத்தில் நிற்க, பிராண வாயும், புருடனும் ஒன்றுமறப் பொருந்தி நிற்கும். துரியாதீதம்: இதன் இடம் மூலாதாரம் பிரான வாயு மட்டிலும் உந்தியில் நிற்க புருட தத்துவம் மட்டிலும் அதீத மாய்க் கருவிகள் ஒன்றுமின்றித் தனியாய்ப் பொருந்தி நிற்கும். இங்ங்னம் ஐந்து அவத்தைகளிலும் கருவிகள் நிற்கும் நிலையினைச் சித்தாந்தம் பிரித்துப் பேசும். சாக்கிரத்தில் (நன வில்) நினைப்பு மறப்பு நிகழ்தலால் இங்ங்ணம் கூறிய ஐந்து உணர்ச்சி வகைகளும் ஒவ்வொரு அவத்தையிலும் நிகழ்வதா கக் கூறுவர். நனவில் அடிகள் கூறிய முப்பத்தைந்து கருவிக ளோடு இருவகைப் பூதங்களும் தொழில் செய்ய எல்லாப் பொருள்களையும் நுகரும் நிலை நனவில் நனவெனப்படும். நனவில் கனவும் உண்டு. அஃது எல்லாப் பொருள்களையும் நுகரும் நிலையில் மனம் துன்புறுதற்கேதுவாகிய ஒன்றைக் கேள்விப்பட்டு வெளிச் செய்திகள் புலனாகாமல் துன்பத்திற் குக் காரணத்தை ஆய்ந்து கொண்டிருக்கும் நிலையாகும். மனத்துன்பத்தை மட்டிலும் உணர்ந்து கொண்டிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/129&oldid=892119" இலிருந்து மீள்விக்கப்பட்டது